கருப்பு கலர் புகை.. அதுவும் 10 கிமீ உயரத்திற்கு.. "வெளியே வரக் கூடாது.." எரிமலை வெடிப்பால் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் ஒரு எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் சாம்பல் புகை சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேல் பரவி இருக்கிறது.

உலகின் மிகப் பெரிய நாடாக இருப்பது ரஷ்யா. இந்தப் பக்கம் ஐரோப்பா முதல் அந்தப் பக்கம் பசிபிக் வரை ரஷ்யா மிகப் பெரிய நாடாகப் பரந்து விரிந்து உள்ளது. உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவை விட 5 மடங்கு பெரியதாகும்.

 Russias most active volcano Shiveluch erupts, shoots ash plume 10 kilometers high

மிகப் பெரிய நாடாக இருக்கும் ரஷ்யா, பல்வேறு கலாச்சாரங்கள், பல மொழிகளையும் கொண்டிருக்கிறது. இப்படி பல்வேறு தரப்பினரைக் கொண்ட நாடாக ரஷ்யா இருந்து வருகிறது.

ரஷ்யா: இப்படிப் பரிந்து விரிந்து இருக்கும் ரஷ்யாவில் பல எரிமலைகளும் இருக்கவே செய்கிறது. இதனிடையே அங்கே ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் எரிமலை இப்போது வெடித்துச் சிதறியுள்ளது. இதில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் உயரத்திற்குச் சாம்பல் புகையைக் கிளம்பியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

மேலும், சுமார் 10 கிமீ தூரத்திற்கு எரிமலை வெடித்துச் சிதறியுள்ள நிலையில், இது விமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்காக கோட் ரெட் வால்கனோ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலைக்கு மேற்கே பெரிய சாம்பல் மேகம் நகர்வதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எரிமலை சீற்றம்: ஆனால், இது இத்துடன் முடிவடையப் போவதில்லையாம். அங்கே எரிமலை சீற்றத்துடன் இருக்கும் நிலையில், எப்போது வேண்டுமென்றாலும் சுமார் 15 கிமீ உயரத்திற்கு எரிமலை வெடித்துச் சிதறும் அபாயம் இருப்பதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தளவுக்கு எரிமலை வெடித்துச் சிதறினால், சர்வதேச மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களைப் பாதிக்கலாம் என்று எச்சரித்துள்ளனர். இதனால் அங்கே சுற்றி இருக்கும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும், அந்த எரிமலைக்கு அருகில் உள்ள கிராமங்களில் வீடுகளில் வசிப்போரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அங்கே இருக்கும் Ust-Kamchatsky என்ற பகுதியில் தான் இந்த எரிமலை வெடிப்பு நடந்துள்ளது.

70 கிமீ வரை பரவல்: இந்த எரிமலை வெடிப்பு என்பது 70 கிமீ தொலைவில் இருக்கும் கிளுச்சி மற்றும் கோசிரெவ்ஸ்க் பகுதிகளுக்கும் கூட பரவியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கே வசிக்கும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஷிவேலுச் எரிமலை ரஷ்யாவில் இருக்கும் மிகவும் ஆக்டிவான எரிமலைகளில் ஒன்றாகும். இந்த எரிமலை கடந்த 10,000 ஆண்டுகளில் 60 முறை வெடித்துள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆக்டிவான எரிமலைகளில் ஷிவேலுச் ஒன்றாகும். இது கடைசியாக 2007ஆம் ஆண்டில் தான் மிகப் பெரியளவில் வெடித்துச் சிதறியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+