நேதாஜி தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும்: ரஷ்யாவிடம் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தல்
மாஸோ: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக ரஷ்யாவிடம் இருக்கும் ஆவணங்களை வழங்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக ரஷ்யா விளங்கி வருவதாகவும், இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கை எப்போதும் மாறாது என்றும் சுஷ்மா தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் ரஷ்யா அமைச்சர் செர்கே லாவ்ரோ பேசுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா நிரந்தர உறுப்பு நாடாகத் தேர்வு செய்யப்படுவதற்கு ஆதரவளிப்போம் என்றார்.
மேலும் நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட்டு உதவுமாறு ரஷ்யா அமைச்சர் லாவ்ரோவிடம் கோரினார். இந்த கோரிக்கையை ஏற்றுள்ள லாவ்ரோவ் இந்த விஷயத்தில் உதவுவதாக உறுதி அளித்துள்ளார்.
இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்து நாட்டின் விடுதலைக்காக போராடிய நேதாஜி கடந்த 1945ம் ஆண்டு தைவான் விமான விபத்தில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது மரணம் குறித்த மர்மம் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
In Moscow pic.twitter.com/cCLcJ2TyYJ
— Sushma Swaraj (@SushmaSwaraj) October 20, 2015 ரஷ்யாவில்தான் அவர் சிறைவைக்கப்பட்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது. இதனால் நேதாஜி குறித்து மத்திய அரசு வசமுள்ள 130 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டால் இந்த மர்மங்களுக்கு விடை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே மேற்கு வங்க நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது.
இதன் பின்னர் நேதாஜி குடும்பத்தினர் கடந்த 14-ம் தேதி டெல்லியில் பிரதமரை சந்தித்தனர். அப்போது நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிடுவது ஜனவரி 23-ந் தேதி அவரது பிறந்த நாளில் மத்திய அரசு வெளியிடும் என பிரதமர் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications