ரஷ்ய அணு மின் நிலையம் மீது இரவோடு இரவாக உக்ரைன் தாக்குதல்.. பற்றி எரிந்த தீ! கடும் கோபத்தில் புதின்
மாஸ்கோ: ரஷ்ய ((Russia)அணு மின் நிலையம் மீது இரவோடு இரவாக உக்ரைன் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள அணு மின் நிலையத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் தாக்குதல் நடத்தியதை ரஷ்ய அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் சுதந்திரம் பெற்றதன் 34 வது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தின நாளில் ரஷ்யாவின் மீது மிகப்பெரும் டிரோன் தாக்குதலை உக்ரைன் முன்னெடுத்துள்ளது. ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் அணு மின் நிலையம் ஒன்று உள்ளது.

இரவோடு இரவாக உக்ரைன் தாக்குதல்
இந்த அணு மின் நிலையத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் தாக்குதல் நடத்தியதை ரஷ்ய அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். ரஷ்ய அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், "உக்ரைன் இரவோடு இரவாக நடத்திய தாக்குதலில் சில எரிசக்தி அமைப்புகள் குறி வைக்கப்பட்டன. அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உக்ரைனின் தாக்குதலால் டிரான்ஸ்பார்மில் சேதம் ஏற்பட்டது. ரேடியேஷன் இயல்பான அளவில்தான் உள்ளது என்று தெரிவித்தனர். அணு மின் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் அவையின் அணு கண்காணிப்பகம் கூறியதாவது:-
10 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
"ராணுவ நடவடிக்கையால் அணு மின் நிலையத்தின் டிரான்ஸ்பார்மர் தீ பிடித்ததாக ஊடகங்களில் வெளியான செய்தியை அறிந்துள்ளோம். இது குறித்து தனியாக தகவல் கிடைக்கவில்லை. அனைத்து அணு நிலையங்களும் எல்லா நேரத்திலும் பாதுகாக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக உக்ரைன் இதுவரை எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதேபோல, ரஷ்யாவின் லெனிகிராடு பிராந்தியத்தில் உள்ள அஸ்ட் லுகா துறைமுகத்திலும் தீ பற்றி எரிந்துள்ளது. ரஷ்யா இந்த துறைமுகத்தில் இருந்துதான் பெரிய அளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. அந்த பிராந்தியத்தின் கவர்னர் கூறுகையில், "உக்ரைனின் 10 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. டிரோன்களின் பாகங்களால் தீ பிடித்துள்ளது" என்றார்.
விட்டுக் கொடுக்க மாட்டோம்
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் மட்டும் 95 க்கும் மேற்பட்ட உக்ரைன் டிரோன்கள் ரஷ்ய பகுதிகளை நோக்கி வந்தன. இவற்றை எங்களின் வான் பாதுகாப்பு அமைப்பு வானிலேயே தாக்கி அழித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் கடந்த 1991 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. இதன் நினைவாக அந்த நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின உரையில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உக்ரைன் மண்ணை எதிரிகளுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறியிருந்தார். கடந்த 15 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அலஸ்காவில் சந்தித்து பேசினர்.
மேலும் பதற்றம் அதிகரிப்பு
இந்த சந்திப்பின் போது, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக பேசப்பட்டது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேரக்கூடாது. கைப்பற்றப்பட்ட பகுதிகளை திரும்ப கேட்க கூடாது போன்ற நிபந்தனைகளை புதின் முன் வைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜெலன்ஸ்கியையும் டிரம்ப் சந்தித்தார். இந்த போரை முடிவுக்கு கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் உக்ரைன் இரவோடு இரவாக அணு மின் நிலையத்தின் மீது நடத்தியுள்ள தாக்குதலை பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications