"கர்கிவ் பேரழிவு".. கொடூர ஆயுதங்களை திறந்துவிட்ட புடின்! சின்னாபின்னமான பெரிய நகரம்! உக்ரைனில் சோகம்
மாஸ்கோ: உக்ரைனில் கர்கிவ் என்ற நகரத்தில் ரஷ்யா மிக மோசமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அந்த நகரும் கடும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
உக்ரைனில் தற்போது உச்சபட்ச போர் நடந்து கொண்டு இருக்கிறது. போர் 6ம் நாள் தாக்குதலை எட்டி உள்ளது. உக்ரைன் நாட்டு ராணுவமும் முழுமையாக களத்தில் இறங்கி போராடி வருகிறது. அதேபோல் அந்நாட்டு குடி மக்களுக்கும் ஆயுதங்கள் கொடுத்து களத்தில் இறங்கி உள்ளனர்.
உக்ரைனுக்குள் 60 சதவிகித ரஷ்ய படைகள் புகுந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இன்னும் 40 சதவிகித படைகள் எல்லை ஓரத்தில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டு உள்ளன.

கர்கிவ்
இந்த நிலையில் உக்ரைனில் இருக்கும் கர்கிவ் என்ற நகரத்தில் ரஷ்யா மிக மோசமான தாக்குதல்களை நடத்தியது. கொத்து குண்டுகள், vaccum குண்டுகள் உள்ளிட்ட மோசமான ஆயுதங்களை பயன்படுத்தி இங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. இங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கி இருக்கலாம். 20 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மோசமான ஆயுதங்கள்
ஆனால் அதிகாரபூர்வமாக பலர் பலியாகி இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. கர்கிவ் என்பது உக்ரைன் - ரஷ்யா கிழக்கு எல்லையில் இருக்கும் சிட்டி ஆகும். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வரும் நிலையில்தான் புடின் இந்த தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு உள்ளார்.

கொடூர தாக்குதல்
அதிக அளவிலான ஏவுகணைகள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. முதல் 5 நாள் போரில் ரஷ்யா பெரிய அளவில் முன்னேறவில்லை. ரஷ்யாவால் பெரிய அளவில் முன்னேற முடியவில்லை. இதன் காரணமாக ரஷ்யா இப்போது கொடூர ஆயுதங்களை இந்த போரில் கட்டவிழ்த்துவிட இருப்பதாக சர்வதேச கிரிமினல் கோர்ட் தெரிவித்துள்ளது. ரஷ்யாவை நாங்கள் கண்காணித்து வருகிறோம். ரஷ்யாவின் போர் முறைகளை ஆராய்ந்து வருகிறோம்.
Recommended Video

ரஷ்யா போர் குற்றம்
ரஷ்யா செய்யும் போர் குற்றங்களை விசாரிப்போம். போர் தேவைப்பட்டாலு முழு விசாரணையை நடத்துவோம் என்று ரஷ்யாவிற்கு எதிராக சர்வதேச கிரிமினல் கோர்ட் தெரிவித்துள்ளது. உக்ரைனின் கர்கிவ் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கர்கிவ் பேரழிவு என்று அழைக்கப்படுகிறது. உக்ரைன் - ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கும் போதே இந்த மோசமான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு, ரஷ்யா இப்படி மோசமான தாக்குதலை நடத்தியது விமர்சனங்களை சந்தித்துள்ளது,












Click it and Unblock the Notifications