முடிஞ்சா தொட்டு பாரு.. ஈரான் மேல கைவச்சா வேறமாறி ஆயிடும்! அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ரஷ்யா!
மாஸ்கோ: ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை காரணமாக காட்டி, மீண்டும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க முயற்சித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, ஈரான் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள மிரட்டல் கருத்துகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ரஷ்ய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானில் தற்போது பொருளாதார நெருக்கடியை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மூன்றாவது வாரமாக நடந்து வரும் இந்த போராட்டங்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் ஈரான் மதத் தலைமைக்கே சவால் விடும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டங்களை கட்டுப்படுத்த ஈரான் அரசு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த போராட்டங்களில் நடைபெறும் வன்முறைக்கு, கலவரக்காரர்கள் மற்றும் வெளிநாட்டு ஆதரவுடன் செயல்படும் சீர்குலைப்பு சக்திகளே காரணம் என ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான் போராட்டங்கள்
மேலும், பொருளாதார பிரச்சினைகளை முன்வைத்து தொடங்கிய போராட்டங்களை ஆயுதம் ஏந்திய குழுக்கள் கைப்பற்றி வன்முறையாக மாற்றியுள்ளதாகவும் ஈரான் கூறுகிறது. இந்நிலையில், ஈரானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போராட்டங்களை காரணமாக காட்டி, மீண்டும் இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க முயற்சித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஈரான் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள மிரட்டல் கருத்துகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ரஷ்ய வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா- அமெரிக்கா
ஈரானின் முக்கிய கூட்டாளியான ரஷ்யா, அந்த நாட்டில் வெளிநாட்டு தலையீட்டிற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஈரானில் ஆட்சிமாற்றம் அல்லது இராணுவ அழுத்தம் ஏற்படுத்தும் முயற்சிகள், மத்திய கிழக்கு முழுவதையும் மேலும் நிலையற்றதாக்கும் என்றும், அதன் விளைவுகள் உலக நாடுகளையே பாதிக்கும் என்றும் ரஷ்யா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஈரான் இராணுவ நடவடிக்கை
ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு நாடுகள் தலையிடுவது மிக மோசமான விளைவுகளை உருவாக்கும் என்றும், தற்போதைய போராட்டங்களை ஒரு காரணமாக கொண்டு மீண்டும் தாக்குதல் நடத்தும் எந்த முயற்சியும் மத்திய கிழக்கு மட்டுமல்ல, உலகளாவிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்றும் ரஷ்யா கூறியுள்ளது. கடந்த 2025 ஜூன் மாதத்தில் ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மீண்டும் தொடர நினைப்பவர்கள், அதன் பேரழிவான விளைவுகளை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டொனால்ட் டிரம்ப்
ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு வெளிநாடுகள் தூண்டுதல் அளிப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. வெளிநாடுகள் தூண்டிய கலவரங்களை காரணமாக்கி, ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், அது சர்வதேச அளவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானில் நடைபெறும் போராட்டங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு
ஈரான் அதிகாரிகளுடன் நடைபெறவிருந்த அனைத்து பேச்சுவார்த்தைகளையும் ரத்து செய்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறை மேற்கொள்ளும் அதிகாரிகள் "பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்" என்றும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளமான 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானிய மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என்றும், அரசு தரப்பில் நடைபெறும் வன்முறைகளை பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
போராட்டக்காரர்கள் கொல்லப்படுவது அர்த்தமற்ற செயல் என்றும், அது நிறுத்தப்படும் வரை ஈரான் அதிகாரிகளுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், உதவி வந்து கொண்டிருக்கிறது எனும் வார்த்தைகள் மூலம், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையலாம் என்ற அச்சத்தையும் அவர் ஏற்படுத்தியுள்ளார்.
-
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications