சீறி வந்த 500 கிலோ ராட்சச "ரஷ்ய" குண்டு! வீட்டின் மீது பொத்தென விழுந்து! அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட்!
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது.ரஷ்யா பெரிய அளவில் இந்த போரில் விமானப்படை தாக்குதலை நடத்தவில்லை.
ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை அதிக அளவில் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அது இல்லாமல் பீரங்கிகள் மூலம் ராட்சச குண்டுகளை ஏவி ரஷ்யா தாக்கி வருகிறது.
இதன் காரணமாக உக்ரைனில் வீடுகள் கடுமையான சேதம் அடைந்து உள்ளது. அதேபோல் மக்கள் வாழும் பகுதிகளில் ரஷ்யா கடுமையாக தாக்கி வருகிறது.

ரஷ்யா - உக்ரைன்
ரஷ்ய படைகள் மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளை குறி வைத்து தாக்குகிறது. அணு உலைகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது என்று உக்ரைன் போர் குறித்து யுகே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த போரில் உக்ரைன் தரப்பில் 10 ஆயிரம் பொது மக்கள் பலி ஆகி இருக்கலாம் என்று, 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்மாறி இருக்கலாம் என்றும் ஐநா தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகள் மக்கள் அதிகம் இருக்கும் பகுதிகளை குறி வைத்து தாக்குகிறது. அணு உலகைகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகே ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது என்று உக்ரைன் போர் குறித்து யுகே உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த போரில் உக்ரைன் தரப்பில் 10 ஆயிரம் பொது மக்கள் பலி ஆகி இருக்கலாம் என்று, 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்மாறி இருக்கலாம் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.

குண்டு
ரஷ்யா இப்படி ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் செர்னிஹிவ் என்ற பகுதியில் நேற்று முதல் நாள் ரஷ்யா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது. பீரங்கிகள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதேபோல் ராக்கெட் குண்டுகளை வீசி வீடுகளை தாக்கியது. இங்கு இருக்கும் பல்வேறு குடியிருப்புகளை நோக்கி நேற்று ராக்கெட் ஷெல் குண்டுகள் வீசப்பட்டன.

என்ன நடந்தது?
அந்த வகையில் அங்கு இருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 500 கிலோ எடை கொண்ட பெரிய குண்டு வீசப்பட்டது. இது ராக்கெட் குண்டு ஆகும். ரஷ்யாவின் சிறிய ரக ராக்கெட் குண்டுகளில் இதுவும் ஒன்று. குண்டு போடப்பட்டு ஒரு சில நொடிகளில் இது போன்ற குண்டுகள் உடனே வெடித்து சிதறும். ஆனால் அந்த குண்டு விழுந்த பின் அதில் இருந்து சில சத்தங்கள் கேட்டுள்ளது.

வெடிக்கவில்லை
குண்டு வெடிப்பது போன்ற லேசான சத்தங்கள் வந்து பின்னர் புஸ் என்று அப்படியே வெடிக்காமல் நின்றுள்ளது. அந்த கட்டிடத்தில் பல குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பெண்கள் இருந்துள்ளனர். குண்டு விழுந்ததும், அவ்வளவுதான் நம்முடைய கதை முடிந்தது என்று அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ஆனால் குண்டு வெடிக்கவில்லை என்றதும் உடனே கட்டிடத்தை விட்டு வெளியேறி உள்ளனர்.
Recommended Video

பேட்டி
இதை பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, 500 கிலோ எடை கொண்ட அந்த குண்டு குடியிருப்பு பகுதியில் விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அது வெடிக்கவில்லை. ஆனால் இதே போன்ற குண்டுகள் பல வெடித்து மக்கள் பலர் பலியாகி உள்ளனர். இதை உடனே தடுக்க வேண்டும். எங்களுக்கு போர் விமானங்கள் இருந்தால் இதை தடுப்போம். எங்களுக்கு உதவுங்கள் என்று, அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications