For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடுமுறை + ஒரு வாரம் சம்பளம்.. அதிபர் புடின் அதிரடி.. நாளுக்கு நாள் எகிறும் தொற்று.. அலறும் ரஷ்யா

ரஷ்யாவில் தொற்று பாதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது

Google Oneindia Tamil News

மாஸ்கோ: ரஷ்யாவில் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது.. இங்கு நவம்பர் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்றாலும், அனைத்து முன்னெச்சரிக்கைகளும் தற்போது தீவிரமாகி வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், உயிரிழப்புகள் கூடுவதாலும் ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை புதின் அரசு அறிவித்துள்ளது.

அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மறுபடியும் தொற்று பரவல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.. அதிலும் சீனா மிரண்டு கிடக்கிறது.. இதையடுத்து, தடுப்பூசியின் பூஸ்டர் ஷாட்களை செலுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதில் மிக மோசமாக தொற்றால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது... முதலிடத்தில் இன்றுவரை உள்ளது.. சீனாவை பொறுத்தவரை இங்குதான் தொற்று முதன்முதலில் தோன்ற ஆரம்பித்தது..

ரஷ்யா, துருக்கியில் அதிகரிக்கும் பாதிப்பு.. உலகம் முழுக்க 4,969,677 பேர் கொரோனாவிற்கு பலி.. பின்னணி ரஷ்யா, துருக்கியில் அதிகரிக்கும் பாதிப்பு.. உலகம் முழுக்க 4,969,677 பேர் கொரோனாவிற்கு பலி.. பின்னணி

தொற்று பாதிப்பு

தொற்று பாதிப்பு

ஆனால் முதலில் தொற்றை விரட்டி அடித்து இயல்பு நிலைமைக்கு திரும்பியதும் இவர்கள்தான். ஆனால், கடந்த சில தினங்களாகவே மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.. இப்போது ரஷ்யாவிலும் தொற்று பெருகி வருகிறது. நேற்று முன்தினம் மொத்த தொற்று பாதிப்பு 8,279,573 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.. 231,669 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.. 861,293 பேர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 446 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

 முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில் பாதிப்பின் அளவு சற்று குறைந்தாலும் இறப்பை பொறுத்தமட்டில் நேற்று முன்தினத்தை விட நேற்று அதிகரித்துள்ளது... 1,106 பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு இறந்துள்ளனர். இங்கு நவம்பர் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்றாலும், அனைத்து முன்னெச்சரிக்கைகளும் தீவிரமாகி வருகின்றன.. மாஸ்கோவில் மட்டும் வரும் 28-ம் தேதி முதலே கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளது.

பள்ளிகள்

பள்ளிகள்

ஆனால் ஒவ்வொரு பிராந்தியமும் நிலைமைக்கேற்ப முன்கூட்டியே விடுமுறையை தொடங்கவும், முடியும் தேதியை நீட்டிக்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது. மாஸ்கோவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 2வது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 80 சதவீத மக்கள் தடுப்பூசி போடுகிற வரையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.. இங்கு தடுப்பூசிகளை பொதுமக்கள் அவ்வளவாக செலுத்தி கொள்ளாததே இந்த வைரஸ் பரவல் காரணம் என்று சொல்லப்படுகிறது..

தடுப்பூசி

தடுப்பூசி

இத்தனைக்கும் ரஷ்ய நாட்டில்தான் உலகிலேயே முதல்முதலில் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது... ஆனால் மூன்றில் ஒருவர்தான் இங்கு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். எனவே, இப்போதுதான் தடுப்பூசி போடுவது அதிகரிக்கப்பட்டு வருகிறது. 30-ந்தேதி தொடங்கி ஒரு வார விடுமுறை காலத்தில் அதிபர் புடின், யாரையுமே நேருக்கு நேர் சந்திக்க மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Russian COVID 19 cases hit record high and Russia has confirmed 8,316,019 cases of coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X