உக்ரைனில் பறக்கும் ரஷ்ய கொடி.. கிழக்கு உக்ரைனையும் ஆக்கிரமித்த படைகள்.. அடுத்து என்ன நடக்கும்?
கிவ்: உக்ரைனில் ஒடேஸாவில் ரஷ்ய படைகள் தங்கள் நாட்டு கொடியை ஏற்றினர். கிவ், கிர்காவ் பகுதிகளை தாண்டி ஒடேஸாவுக்கும் ரஷ்ய படைகள் வந்துவிட்டன. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உக்ரைன் மக்கள் இருக்கிறார்கள்.
Recommended Video
உக்ரைன் மீது அதிகாலை முதலே ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனில் வான்வழியாக தாக்குதல் நடத்திய நிலையில் அங்குள்ள விமான தளங்கள், ராணுவ தளங்களை ரஷ்யா அழித்துவிட்டது.
பதிலுக்கு ரஷ்யாவின் 5 போர் விமானங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வீழ்த்தியுள்ளது. தொடர்ந்து ஓயாமல் குண்டுகளும் துப்பாக்கிச் சூடுகளும் வெடித்துக் கொண்டே இருப்பதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

ரஷ்ய ராணுவம்
ரஷ்ய ராணுவம் ஆக்கிரமிக்க ஏதுவான பகுதிகளை சேர்ந்த பலர் அந்த பகுதிகளை விட்டு வெளியேறி உக்ரைனின் மேற்கு பக்கம் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அது போல் ஏடிஎம் வாசல்களில் பணம் எடுக்க நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு இவ்வளவு பணம்தான் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் இருக்கிறது.

ஆயுதம்
ஆயுதத்தை பயன்படுத்தி போர் புரிய விரும்புபவர்கள் போரிடலாம் என உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. கார்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷ்ய படைகள் அங்கிருந்து ஓடேஸாவுக்குள்ளும் நுழைந்துள்ளது. அங்குள்ள உக்ரைன் அரசு அலுவலகத்தில் ரஷ்யா கொடியை ராணுவ வீரர்கள் ஏற்றினர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

ரஷ்ய கிளர்ச்சியாளர்கள்
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் முன்னேறியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் பலியாகிவிட்டதாகவும் மேலும் ரஷ்யாவை சேர்ந்த 50 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

குண்டு மழை
ஆங்காங்கே குண்டு மழையும் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டு வருவதால் மக்கள் கிவ் உள்ளிட்ட நகரங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான நகரங்களுக்குள் செல்ல முயல்கிறார்கள். ஆனால் வழி நெடுகிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உணவு பொருட்களை வாங்கவும் அவர்கள் திரண்டுள்ளார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications