இந்திய மருந்து நிறுவன கிடங்கு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்.. திட்டமிட்டு தாக்கியதாக உக்ரைன் பகீர்
மாஸ்கோ: உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் இந்திய மருந்து நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கடைபிடித்து வருவதாக சொல்லிக்கொள்ளும் ரஷ்யா, வேண்டும் என்றே இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ரஷ்யா அந்த நாடு மீது போர் தொடுத்தது.

இந்திய நிறுவனத்தின் மீது தாக்குதல்
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்ததால், ரஷ்யாவுடன் சரி சமமாக மல்லுக்கட்டிய உக்ரைனுக்கு டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக ஆன பிறகு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டால் உக்ரைனுக்கான நிதி உதவி, ஆயுத உதவி நிறுத்தப்படும் என மிரட்டினார். இதையடுத்து உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு இறங்கி வந்தது. ரஷ்யாவும் இதற்கு முதலில் ஒப்புக்கொண்டது.
எனினும், ரஷ்யா விதித்த நிபந்தனைகள் உள்ளிட்டவை காரணமாக ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபடுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கில் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
வேண்டும் என்றே குறிவைத்து தாக்குதல்
ரஷ்யா வேண்டும் என்றே இந்திய நிறுவனங்களின் தொழில்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக உக்ரைன் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உக்ரைனில் உள்ள குசும் (Kusum) என்ற மருந்து நிறுவனத்தின் குடோவுன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்கியுள்ளது. இந்தியாவுடன் சிறந்த நட்புறவை கடைபிடித்து வருவதாக கூறி வரும் ரஷ்யா, இந்திய வணிகங்களின் மீது வேண்டும் என்றே தாக்குதல் நடத்தி வருகிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்காக வைக்கப்பட்டு இருந்த மருந்துகளை அழித்து இருக்கிறது" என்று கூறப்பட்டு உள்ளது.
குசும் என்ற மருந்து நிறுவனம், இந்திய தொழில் அதிபர் ராஜீவ் குப்தாவிற்கு சொந்தமானது. உக்ரைனில் உள்ள மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். அடிப்படை மருந்துகளை உக்ரைன் முழுவதும் இந்த நிறுவனம் விநியோகம் செய்து வருவதால், இந்த தாக்குதல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. டிரோன் மூலமாக நேரடியாக குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரைனிய அதிகாரிகள் சொன்னதாக தகவல்கள் கூறுகின்றன.
ஒப்பந்தத்தை மீறி
உக்ரைன் இது தொடர்பான தகவலை வெளியிடும் முன்பே உக்ரைனுக்கான பிரிட்டன் தூதர் தனது எக்ஸ் தளத்தில் இந்த தாக்குதல் தொடர்பான தகவலை வெளியிட்டு இருந்தார். அவர் கூறுகையில், "கீவ் நகரில் உள்ள மருந்து நிறுவன பண்டகசாலையை ரஷ்ய டிரோன்கள் முற்றிலும் அழித்துவிட்டன. முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகளின் இருப்புக்கள் அழிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் பொதுமக்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவதை உக்ரைனும் ரஷ்யாவும் கடந்த மாதம் ஒப்புக்கொண்டன. எனினும், இரு தரப்பும் இந்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலை தொடர்வதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. போருக்கான காலம் இது இல்லை எனவும் இந்தியா தொடர்ந்து சர்வதேச மன்றங்களில் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
புதினுடன் தொலைபேசியில் பேச்சு
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்த பிறகு, ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்தது. இதையடுத்து, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா மாறியது. பிற நாடுகளை விட சலுகை விலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சித்து எடுத்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் டிரம்புடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். புதினுடன் தொலைபேசி வாயிலாக பேசிய நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இரண்டு முறை நேரில் பேசியிருக்கிறார்.
30 நாட்களுக்கு நிறுத்தம்
போர் நிறுத்தத்திற்கான முன்னேற்பாடுகளை டிரம்ப் மேற்கோண்டு வரும் நிலையில், எரிசக்தி கட்டமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தப்படாது என்ற திட்டத்திற்கு புதின் ஒப்புதல் தெரிவித்தார். அதாவது, கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின்போது 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்தது.
இதை உக்ரைன் ஏற்றுக்கொண்டது. ஆனால் ரஷ்யா உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ரஷ்யா மீதான தடைகள் அதிகரிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்த நிலையில், அவருடன் தொலைபேசி வாயிலாக புதின் பேசினார். அப்போது, டிரம்ப் முன்மொழிந்த போர் நிறுத்தத்தை புதின் முழுமையாக ஏற்கவில்லை. எனினும் 30 நாட்களுக்கு உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் நடக்காது என்று கூறினார்.
குழந்தைகள் உள்பட 31 பேர் பலி
ஆனாலும் ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை மதிப்பது இல்லை எனவும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாகவும் உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. இத்தகைய சூழலில் தான் உக்ரைனில் உள்ள மருந்து கிடங்கு மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே, உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. குருத்தோலை பண்டிகை கொண்டாடப்படும் நாளான இன்று காலை 10.15 மணியளவில் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் இதில், அப்பாவி பொதுமக்கள் பலியாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் இருவர் குழந்தைகள் எனவும் 84 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். தனது சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக ஜெலன்ஸ்கி கூறுகையில், ரஷ்யாவின் தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது. உலக நாடுகள் இதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்க கூடாது. போரை நிறுத்த ரஷ்யாவுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications