நைஜர் மீது கை வைச்சா அவ்வளவுதான்! சோவியத் பாணியை கையில் எடுக்கும் 'புதின்'? ஸ்டன்னாகி நின்ற பிரான்ஸ்
மாஸ்கோ: நைஜர் நாட்டின் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு கிளர்ச்சி செய்த நிலையில், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான 'எகோவாஸ்' அறிவித்துள்ளதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மீறி தாக்குதல் நடத்தினால் அது நீடித்த மோதலுக்கு வழி வகுக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
ஆப்பிரிக்கா என்று சொன்னாலே உடனே நினைவுக்கு வருவது கருப்பின மக்களும், எலும்பும் தோலுமாய் காட்சியளிக்கும் குழந்தைகளும்தான். உலகின் வேறு எங்குமே இருக்காத பல அபூர்வ விலங்குகள் கூட செழிப்பாக வாழும் இந்த பூமியில் மனிதர்களுக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை? நமது பூமியில் மொத்தமுள்ள வளங்களில் ஏறத்தாழ 30 சதவிகிதம் ஆப்பிரிக்காவில்தான் இருக்கிறது. அப்படி இருந்தும் ஏன் மக்கள் வருமையில் வாடுகின்றனர்? இப்படியான கேள்விக்கு விடையை தேடி சென்ற மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டின் ராணுவம் கடைசியில் சென்று நின்ற இடம் ஆட்சிக் கவிழ்ப்பு.

நைஜர் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்காவில் யுரேனியம் அதிக அளவில் கிடைக்கிறது. இது அனு உலைகளில் மின்சார உற்பத்திக்கு பயன்படுகிறது. மற்ற நாடுகளில் கிடைக்கும் யுரேனியத்தைவிட இங்கு கிடைக்கும் யுரேனியம் அதிக திறன் கொண்டது. எனவே இதற்கு நிறைய டிமான்ட் இருக்கிறது. இந்த யுரேனியத்தை கைப்பற்ற ஐரோப்பிய நாடுகளில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் முன்னணியில் இருப்பதுதான் பிரான்ஸ்.
1965ம் ஆண்டு வரை மேற்கு ஐரோப்பா பிரான்ஸின் அடிமை நாடாக இருந்தது. அதன் பின்னர் நடந்த சுதந்திர போராட்டத்தின் காரணமாக பிரான்ஸ் அங்கிருந்து வெளியேறியது. இருந்தாலும் இதை இப்படியே விடக்கூடாது என்பதற்காக தனது கைப்பாவையாக ஒரு அரசை நிறுவிவிட்டு சென்றது. அந்த அரசு பிரான்ஸ் நாட்டுக்கு தேவையான அனைத்தையும் செய்து வந்தது. குறிப்பாக யுரேனியம் ஏற்றுமதி. இன்று ஐரோப்பிய கண்டத்தில் ஒளிரும் மூன்று பல்புகளில் ஒரு பல்புக்கான கரன்ட் இந்த யுரேனியத்திலிருந்துதான் எடுக்கப்படுகிறது.
ஆனால், இந்த யுரேனியத்தை கொடுக்கும் நைஜர் போன்ற மேற்கு ஆப்பிரிக்காவில் மின்சாரமே இன்னும் பல இடங்களுக்கு சென்று சேரவில்லை. எனவே இதனை உணர்ந்த நைஜர் ராணுவம் பிரான்ஸின் கைப்பாவையாக இருக்கும் அதிபர் முகமது பஸூமை சிறை வைத்து ஆட்சியை கைப்பற்றியது. இப்படி கைப்பற்றிய பின்னர் முதல் வேலையாக பிரான்ஸ் நாட்டுடன் இருக்கும் ராஜ்ய உறவை துண்டித்தது. ராணுவத்தின் இந்த செயலுக்கு ஐநா ஐரோப்பிய யூனியன், ஆப்பிரிக்க யூனியன் கடும் கண்டனம் தெரிவித்தன.
அதேபோல ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட அதிபர் முகமது பஸூமிடம் மீண்டும் ஆட்சி ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான 'எகோவாஸ்' வலியுறுத்தியிருந்தது. இதற்காக ஆகஸ்ட் 6ம் தேதி வரை கெடுவை நிர்ணயித்திருந்தது. இப்படி இருக்கையில் கெடு முடிந்து ஒரு வார காலகட்டம் ஆகிவிட்டது. எனவே தாக்குதலுக்கு எகோவாஸ் தயாராகி வருகிறது. விரைவில் தாக்குதல் தொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதுவரை பொறுமையாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரஷ்யா, "எகோவாஸ், நைஜர் நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தால் அது நீடித்த மோதலுக்கு வழிவகுக்கும்" என்று எச்சரித்துள்ளது. நைஜரில் நடந்த ராணுவ கிளர்ச்சிக்கு ரஷ்யா நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக சப்போர்ட் செய்து வருகிறது. ஏற்கெனவே சோவியத் காலத்தில் ரஷ்யா, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஃபுல் சப்போர்ட் செய்து வந்தது. இந்நிலையில் புதின் இவ்வாறு அறிவித்திருப்பது சோவியத் பாணியை அவர் மீண்டும் கையில் எடுக்கிறாரா? என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.
மட்டுமல்லாது நைஜர் விஷயத்தில் ஒரு சிறிய தாக்குதல் சம்பவம் நடந்தாலும் ரஷ்யா நிச்சயம் அமைதியாக இருக்காது என்பதால் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பீதியடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications