ஹெலிகாப்டரில்.. 13,000 அடி உயரத்தில் நாய்களுக்கு டிரெயினிங்.. ரஷ்ய ராணுவத்தினர் அசத்தல் வீடியோ..!
12 ஆயிரம் அடி உயரத்தில் நாய்களுக்கு ராணுவத்தினர் பயிற்சி தருகிறார்கள்
மாஸ்கோ: ஹெலிகாப்டர்களில் நாய்களை வானத்தில் அழைத்து சென்று, போர் பயிற்சி வழங்குகிறார்கள் ரஷ்யா விஞ்ஞானிகள்.. இது தொடர்பான வீடியோ, போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர்.
நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம்.. அதனால்தான் நாய்களை ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது என்பது பல வருடமாகவே நடைமுறையில் உள்ளது..
குறிப்பாக, மனிதர்கள் செல்ல முடியாத இடத்துக்கு இந்த நாய்களை அனுப்புவது ராணுவத்தில் நடந்து கொண்டுதானிருக்கிறது..

போர் பயிற்சி
இந்நிலையில், ஒரு வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ரஷ்யாவில் 13,000 அடி உயரத்தில் நாய்களுக்கு இந்த போர் பயிற்சி வழங்கப்படுகிறது.. ராணுவ ஹெலிக்காப்டரில் அழைத்து செல்லப்படும் நாய்கள், பாராசூட்டில் உள்ள வீரர்களுடன் ஒன்றாக கட்டப்பட்டு அந்தரத்தில் பறக்க விடப்படுகிறது.

ஃபிளைட்
சுமார் 13,000 அடி உயரத்தில் இந்த டிரெயினிங்கை அந்த நாய்களுக்கு தருகிறார்கள்.. அப்படியே ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை போலவே, இந்த நாய்களுக்கும் தரப்படுகிறது.. ஒரு ஃபிளைட் திடீரென தரையிறங்க முடியாத இடங்களுக்கு இத்தகைய பயிற்சி தரப்பட்ட ராணுவ சேவை நாய்களை கொண்டு செல்ல உதவும் என்கிறார்கள்.

பாதுகாப்பு
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை ஒரு செய்தி குறிப்பையும் வெளியிட்டுள்ளது. அதில், நாய்களுக்கு அளிக்கப்படும் ராணுவ பயிற்சிகளை மிகவும் பாதுகாப்பாக, வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது. அந்த பயிற்சியில் ஈடுபடும் எல்லா நாய்களும் பாதுகாப்பாக இருக்கின்றன.. இப்போது, தொடர்ந்து தரப்படும் பயிற்சிகளில் நல்ல நிலையை எட்டியுள்ளது" என்றார்.

சவால்
வானத்திற்கு அழைத்து செல்லப்படும் இந்த நாய்களை மறுபடியும் கீழே கொண்டு வருவதிலும் எந்த பிரச்சனையும் இல்லை.. ஆனால், அவைகளை ஹெலிகாப்டருக்குள் கொண்டு செல்வதுதான் சற்று சவாலாக இருக்கிறது என்கிறார்கள்.. ஆனால், ஒருமுறை ஹெலிகாப்டருக்குள் வந்துவிட்டால், அவை கொஞ்ச நேரத்தில் இயல்பாகி விடுகிறாம்.. டிரெயினிங் தந்தால், அவைகளை மகிழ்ச்சியாக திருப்பி செய்கின்றனவாம்.

டிரெயினிங்
பாராசூட்டில் இருந்து தனியாக குதிக்க சொன்னால், சத்தம் போட்டு ஜாலியாக கீழே குதிக்கின்றனவாம்.. இதுவே ராணுவ வீரர்களுடன் குதித்தால், அமைதியாக சத்தமின்றி குதிக்கின்றனவாம் இந்த நாய்கள். இந்த கட்ட ட்ரெயினிங்கை முடித்துவிட்டு, அடுத்தக்கட்டமாக 26,000 அடி உயரத்திலிருந்து நாய்களை பறக்கவிட்டு சோதனை செய்ய போகிறார்களாம்.. அநேகமாக இந்த வருடம் முடிவதற்குள் இந்த பயிற்சியும் நாய்களுக்கு தரப்பட்டுவிடும் என்கிறார்கள்.

கண்டனம்
ஆனாலும், இந்த வீடியோ பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி விட்டு வருகிறது.. வாயில்லா ஜீவன்களான இந்த நாய்களை இப்படி வானத்தில் கட்டி தொங்கவிடுவது சரிதானா? இதை எப்படி சாகசம், துணிச்சல் என்று சொல்ல முடியும்? கொடூரமாகவே தென்படுகிறது என்று வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை சோஷியல் மீடியாவில் தெரிவித்து வருகின்றனர்.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications