"கொடுமை".. 16 வயசுதான்.. சீரழித்த வீரர்கள்.. சிதலமடைந்த சடலம்.. நெஞ்சை பிளந்த தாயின் கதறல்
16 வயது பெண்ணை ரஷ்ய வீரர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்
மாஸ்கோ: 16 வயது இளம்பெண்ணின் சிதலமடைந்த சடலத்தை பார்த்ததும், பெற்ற தாய் கதறி கதறி அழுதது காண்போரை உலுக்கி எடுத்து விட்டது.. எல்லாவற்றிற்கும் காரணம் அதே ரஷ்ய படையினர்தான்..!
எந்த நாடு அறிவுறுத்தியும், எச்சரித்தும் அதற்கு கட்டுப்படாமல், உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது ரஷ்யா. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்.
அவர்களின் உடைமைகளையும் ரஷ்ய ராணுவம் வேட்டையாடி கொண்டிருக்கிறது.. இதற்கு நடுவில், ஈவிரக்கமே இல்லாமல் சிறுமிகள் , சிறுவர்கள், மற்றும் ஏராளமான பெண்களை ரஷ்ய ராணுவத்தினர் பலாத்காரம் செய்யும் கொடுமையும் அதிகரித்து காணப்படுகிறது..

பகீர் புச்சா நகர்
ஒவ்வொரு பலாத்கார செய்தியும் தலையில் இடியாய் இறங்கிவருகிறது.. உக்ரேனிய நாடாளுமன்ற உறுப்பினர் லிசியா வசிலெங்கோ சமீபத்தில் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.. அதில், . உக்ரைனின் புச்சா நகரில் வசிக்கும் 14 வயது சிறுமி 5 ரஷ்ய வீரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், அதனால், அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் சில தினங்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.

அந்தரங்க உறுப்பு
மேலும் 10 வயது சிறுமிகளின் அந்தரங்க உறுப்புகள் சேதப்படுத்தியதுடன், ஸ்வஸ்திக் என்ற முத்திரையை அவர்கள் மீது ரஷ்ய வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.. அதேபோல, உக்ரைனை சேர்ந்த இர்பின் நகரிலும், 20 வயதான இளம்பெண்ணை 3 வீரர்கள் கொடூரமாக சீரழித்தனர் என்றும், 11 வயது சிறுவனை, 3 ரஷ்ய ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமை செய்தனர், அதுவும், அந்த சிறுவனின் தாயை கட்டிப்போட்டுவிட்டு, அவர் கண் முன்னே சிறுவனை பலாத்காரம் செய்ததாகவும், லிசியா தகவல் வெளியிட்டிருந்தார்.

16 வயது லிசியா
இந்நிலையில், இன்னொரு அதிர்ச்சி தகவலையும் லிசியா வெளியிட்டுள்ளார்.. புச்சாவில் வசித்து வந்த 16 வயது பெண்ணை திடீரென காணவில்லையாம்.. அந்த பெண்ணின் பெயர் கரீனா... இதனால் பதறி போன அந்த பெண்ணின் தாய், பல இடங்களில் மகளை தேடி அலைந்துள்ளார்.. எங்கெங்கோ பதறிக் கொண்டே தேடி தேடி பார்த்துள்ளார்.. ஆனால் மகளை காணவில்லை..

16 வயது பெண்
நாட்டையே போர் சூழ்ந்துள்ள நிலையில், மகளுக்கு என்ன ஆச்சோ என்று பரிதவிப்புடன் கதறி கொண்டிருந்தார். அப்போதுதான், அந்த செய்தி தலையில் இடியாய் இறங்கியது.. கரீனாவை, அந்த கொடூர ரஷ்ய வீரர்கள் பலாத்காரம் செய்துள்ளனர்.. அத்துடன் துப்பாக்கியாலும் கரீனாவை சுட்டு பொசுக்கி உள்ளனர்.. புச்சா நகர கட்டிடங்களின் இடிபாடுகளுக்கிடையே கரீனாவின் சடலம் நாட்கணக்கில் கிடந்துள்ளது..

கதறல்
அந்த பகுதி மக்கள்தான் பெண்ணின் சடலம் கிடப்பதை கண்டறிந்து, அவரது தாய்க்கு தகவல் தந்தனர்.. சிதைந்த நிலையில் கிடந்த மகளின் சடலத்தை கண்டதும், பெற்ற தாய் புரண்டு புரண்டு அழுதார்.. அவரது கண்ணீரும், கதறலும் காண்போரின் நெஞ்சை பிசைந்தெடுத்தது.. இவ்வளவு தகவலையும் உக்ரேனிய எம்பி லிசியா வசிலிங்கோதான் மீண்டும் வெளியிட்டுள்ளார்.. இன்னும் என்னென்ன கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டி இருக்கிறதோ என்று உக்ரைன் மக்கள் கதிகலங்கி போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications