For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கால்வன் மோதல்.. வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மவுன அஞ்சலி

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: லடாக் எல்லையில் இந்தியா- சீனா இடையேயான மோதலில் வீரமரணமடைந்த இந்திய வீரர்களுக்கு கலிபோர்னியா மாகாணத்தில் சாக்ராமென்டோவில் உள்ள அமெரிக்க வாழ் இந்தியர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

 Sacramento based Indian Americans pay tribute to Galwan Martyrs

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது சாக்ரமென்டோ நகரம். இங்கு இந்தியா சீனா மோதலில் வீரமரணடைந்த 20 இந்திய வீரர்களுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டது. கிரேட்டர் சாக்ரமென்டோ பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலம் சந்தித்தனர்.

 Sacramento based Indian Americans pay tribute to Galwan Martyrs

சாக்ரமென்டோவின் இந்திய அமைப்பு (Indian Association of Sacramento- IAS) இந்த கூட்டத்தை முன்னின்று நடத்தியது. மோதலில் வீரமரணமடைந்த கலோனல் சந்தோஷ்பாவுவின் நண்பர்களும் இந்த ஆன்லைன் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்திய வீரர்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்கும் விதமாக இரு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 Sacramento based Indian Americans pay tribute to Galwan Martyrs

இதில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்டனர். இந்த அமைப்பின் துணை தலைவர் பாஸ்கர் வெம்பட்டி காணொலி மூலம் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் ஐஏஎஸ் அமைப்பின் தலைவர் சிவேஷ் சின்ஹா, வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 Sacramento based Indian Americans pay tribute to Galwan Martyrs

அப்போது அவர் மோடி கூறியதை மேற்கோள்காட்டி பேசினார். மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி கூறுகையில் இந்தியாவிலிருந்து ஒரு பிடி மண்ணை கூட மற்ற நாட்டினரால் ஆக்கிரமிக்க முடியாது. இந்திய எல்லையில் ஊடுருவியவர்களுக்கு தக்க பதிலடியை இந்தியா கொடுத்துள்ளது என மோடி கூறியிருந்தார். பின்னர் சிவேஷ் கூறுகையில் சீனா ஒரு எதேசதிக்கார நாடு. வட அமெரிக்காவிலும் சீனாவுக்கு வெளியேவும் வாழும் சீன மக்கள் இந்த எதேசதிக்கார கொள்கையால் அதிருப்தி அடைந்துள்ளது.

 Sacramento based Indian Americans pay tribute to Galwan Martyrs

தங்கள் நாட்டுக்கு செல்வது பாதுகாப்பானது அல்ல என உணர்கிறார்கள். நமது கோபம் சீனர்கள் மீது அல்ல. இந்தியாவுக்கு எதிராக ஆக்ரோஷமான கொள்கைகள், சீன அரசு மீதுதான் கோபம் கொப்பளிக்கிறது என்றார். மேலும் சீனாவின் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணித்து அதற்கு மாற்று பொருட்களை கண்டறிவோம் என்றும் தெரிவித்தார்.

 Sacramento based Indian Americans pay tribute to Galwan Martyrs

கலோனல் சந்தோஷ் பாபுவின் நண்பர் ஜெனரல் ராவ் கூறுகையில் சந்தோஷ் பாபுவுக்கு நினைவிடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இந்திரா காந்தி காலத்தில் ராணுவத்தில் தான் 40 ஆண்டுகள் பணியாற்றியதாகவும் அவர் தெரிவித்தார். 2010-இல் தான் ஓய்வு பெற்றார். சீன எல்லையிலும் தான் பணியாற்றியதாக தெரிவித்தார்.

 Sacramento based Indian Americans pay tribute to Galwan Martyrs

அவர் மேலும் கூறுகையில் வீரம், ஊக்கம், அதிக நபர்கள் என சிறந்த வீரர்களை நாம் கொண்டுள்ளோம். 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் படைகள் எப்படி இருந்ததோ அப்படியே இருப்பதாக சீனா எடுத்துக் கொண்டது. ஆனால் இன்று நாம் அனைத்து வழிகளிலும் எதிரிகளை துரத்தியடிக்க திறன் பெற்றுள்ளோம் என்பதை சீனா மறந்துவிட்டது என்றார் ராவ். இந்த நிகழ்வில் வீரமரணமடைந்த சந்தோஷ் பாபுவின் நண்பர் வெங்கடேஸ்வரலு கலந்து கொண்டார்.

சீனாவிடம் பாக். வாங்கும் உளவு டிரோன்.. பிளான் பிரிடேட்டர்- B யை கையில் எடுத்த இந்தியா.. செம திட்டம்சீனாவிடம் பாக். வாங்கும் உளவு டிரோன்.. பிளான் பிரிடேட்டர்- B யை கையில் எடுத்த இந்தியா.. செம திட்டம்

English summary
Sacramento based Indian Americans pay tribute to Galwan Martyrs. Over 150 Indians participated through Online.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X