பண்ணை வீட்டில் சாரா.. நீச்சல் குளத்தில் மிதந்த உடல்பாகங்கள்.. கிலியை கிளப்பிய பெண் மரணம்.. தீர்ப்பு
லண்டன் இளம்பெண் மர்ம மரணத்தில் குற்றவாளி கைதாகி உள்ளார்
பாரிஸ்: 5 மாதங்களுக்கு பிறகு இளம்பெண் மரணத்தில் குற்றவாளி கைதாகி உள்ளார்.. இந்த வழக்கின் தீர்ப்பு லண்டனில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
தெற்கு லண்டனில் பிரிஸ்டன் பகுதியில் வசித்து வந்தவர் சாரா... 33 வயதாகிறது.. மார்க்கெட்டிங் நிர்வாகியாக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி மாலை, நண்பரை சந்திக்க சென்றார்.
பிறகு அன்று இரவு 9 மணியளவில் நண்பரை சந்தித்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினார்.. வரும் வழியில் எல்லாம், அதே நண்பருடன் செல்போனில் பேசி கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்..

போலீஸ்
அப்போது திடீரென செல்போனில் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.. அவ்வளவு நேரம் நன்றாக பேசி கொண்டிருந்த நிலையில், இணைப்பு ஏன் திடீரென துண்டிக்கப்பட வேண்டும்? சாராவிற்கு என்ன ஆச்சோ என்று அந்தநண்பர் அதிர்ச்சி அடைந்து, கடைசியில் போலீசில் புகார் தந்தார். அதன்பேரில் போலீசாரும் விசாரணையை துவங்கினர்..

வீடியோ
சோஷியல் மீடியாக்களிலும் சாரா மாயமானது பகிரப்பட்டது.. இதனால் அந்த நகரமெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. எங்கெங்கோ தேடியலைந்த நிலையில், ஒரு வாரம் கழித்துதான் சாராவின் சடலம் கிடைத்தது.. அவர் காணாமல் போன இடத்தில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள கென்ட் நகருக்கு அருகே சாரா பிணமாக கிடந்தார்.. அது ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி..

விசாரணை
அங்கிருந்த குளத்தில் சாராவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அப்போதுதான் வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினர்.. சாரா காணாமல் போன இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை முதலில் ஆய்வு செய்தனர்.. அப்போது, வேன் கூசன்ஸ் என்பவர்தான் இதில் சம்பந்தப்பட்டவர் என்பதை பார்த்து போலீசார் அதிர்ந்து போய்விட்டனர்..

போலீஸ் அதிகாரி
காரணம், அவரும் ஒரு போலீஸ் அதிகாரி ஆவார்.. 48 வயதாகிறது. சிசிடிவி காட்சியின் ஆதாரத்தை வைத்து, சாரா பற்றி கேட்டதற்கு, உண்மையை ஒப்புக் கொண்டார்.. சாராவை கொலை செய்ததையும் போலீசாரிடம் சொல்லிவிட்டார்.. பின்னர் அதிகாரியை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.. வழக்கை விசாரித்த நீதிபதி, கூசன்ஸுக்கு பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.. கடந்த 5 மாதமாகவே இந்த கொலை பெரும் பரபரப்பை கிளப்பியது..

ஆர்ப்பாட்டம்
சாராவுக்கு என்ன ஆச்சு? என்று சோஷியல் மீடியாவில் பொதுமக்கள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தனர்.. உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டே இருந்தனர்.. போலீசாருக்கு எந்த க்ளூவும் கிடைக்காத நிலையில், இந்த வழக்கு ஒரு சவாலாகவே இருந்தது. இறுதியில் ஒருவழியாக குற்றவாளியை பிடித்துவிட்டனர். சாராவுக்கு அன்று என்னதான் நடந்தது என்பது குறித்து போலீசாரே செய்தியாளர்களிடம் விளக்கினார்கள்..

விதிமுறைகள்
சம்பவம் நடந்த அன்று, சாரா தன்னுடைய வீட்டிற்கு நடந்து வந்தபோது, கூசன்ஸ் அங்கே வந்துள்ளார்.. தான் போலீஸ் என்று சொல்லி அடையாள அட்டையையும் காட்டி மிரட்டியுள்ளார்... கொரோனா விதிமுறைகளை ஏன் மீறுகிறாய் என்று கேட்டு, சாராவை கைது செய்வதாக சொல்லி, கையில் விலங்கு பூட்டி, காரில் ஏற்றியுள்ளார். ஆனால், ஆள் நடமாட்டம் இல்லாத தன்னுடைய பண்ணை வீட்டுக்கு சாராவை கடத்தி சென்றுவிட்டார்..

பலாத்காரம்
அங்கு அவரை பலாத்காரம் செய்து, பிறகு, தன்னுடைய போலீஸ் பெல்ட்டால் சாராவின் கழுத்தை நெரித்து கொலையும் செய்துள்ளார்.. சடலத்தை தீ வைத்து எரித்துள்ளார்.. எரித்த உடலை பண்ணை வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் வீசிவிட்டு டியூட்டிக்கு சென்றுவிட்டார்... சாராவை கடத்திய இடத்தில் சிசிடிவி கேமரா இருந்ததை கூசன்ஸ் கவனிக்கவில்லை.. அதனாலேயே தன்னை யாரும் பிடிக்க மாட்டார்கள் என்று நம்பி உள்ளார்.. இப்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

போலீசார்
போலீசாருக்கு இந்த வழக்கின் தீர்ப்பு மிகப்பெரிய பாராட்டை பெற்று தந்துள்ளது.. இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கருத்து தெரிவித்துள்ளார்.. "சாராவிற்கு நேர்ந்த கொடுமை அதிர்ச்சி அளிக்கிறது, இதுபோன்ற குற்றச்செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாதவாறு போலீசார் செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications