பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை: சவுதி அரேபிய அரசு அதிரடி
பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
Recommended Video

ரியாத்: பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. இங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளை போல பெண்கள் இங்கு சுதந்திரமாக இருக்க முடியாது. ஆண்களுடன் பழகவோ, வெளியிடங்களுக்கு செல்லவோ பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இளவரசர் முகமது பின் சல்மான், நிர்வாகத்தில் பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது, அண்மையில் பெண்களுக்கு கார் ஓட்டும் லைசென்ஸ் வழங்கப்பட்டது, அதேபோல் கால்பந்து போட்டிகளை காணவும் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அனுமதி கடிதம் வேண்டும்
அந்த வகையில் தற்போது பெண்கள் தொழில் தொடங்க ஆண்களின் அனுமதி தேவையில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் பெண்கள் தொழில் தொடங்க ஆண் பாதுகாவலர் அனுமதி பெற வேண்டும். அதாவது கணவர், தந்தை அல்லது சகோதரர் அனுமதி கடிதத்தை விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.

எந்த தடையும் இல்லை
தற்போது பெண்கள் தொழில் தொடங்க இத்தகைய அனுமதி கடிதம் தேவையில்லை. பெண்கள் சுயமாக தொழில் தொடங்க எந்த தடையும் இல்லை என சவுதி அரேபியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் குவிந்துள்ளன
சவுதி விமான நிலையங்களில், பெண்களுக்கென்றே, 140 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் பணிபுரிய, ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

மூன்றில் ஒரு பங்கு
சவுதி அரேபியாவில் 22 சதவீத பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்; இதை, 2030க்குள், மூன்றில் ஒரு பங்காக உயர்த்த இளவரசர் முகமது பின் சல்மான் முடிவு செய்துள்ளார். அதற்காக பல மாற்றங்களை அவர் செய்து வருகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications