ஷியா மதகுருவுக்கு மரண தண்டனை- ஈரானில் செளதி தூதரகங்கள் தீக்கிரை! இருநாட்டு தூதரக உறவு துண்டிப்பு!!
ரியாத்/ டெஹ்ரான்: செளதியில் அரசுக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியில் ஈடுபட்டதாக ஷியா மதகுருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஈரானில் போராட்டம் வெடித்தது. ஈரானில் உள்ள செளதி தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஈரானுடனான அனைத்து தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்வதாக செளதி அரேபியா அறிவித்துள்ளது.
செளதி அரேபியாவில் நேற்று முன்தினம் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டதாக முஸ்லிம்களின் ஷியா பிரிவு மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் உட்பட 47 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஷியா முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஈராக், ஈரான், சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

செளதியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற போராட்டத்தின் போது செளதி அரேபியாவின் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. அப்போது செளதி தூதரகத்தை போராட்டத்தில் ஈடுபட்டோர் தீயிட்டு கொளுத்தினர். மேலும் மஷாத் நகரத்தில் உள்ள செளதி துணை தூதரகமும் தீக்கிரையாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஈரானுடனான தூதரக உறவுகளை துண்டித்துக் கொள்வதாக செளதி அரேபியா அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செளதி அரேபியா வெளியுறவுத் துறை அமைச்சர் அதெல் அல் ஜூபைர், ஈரானில் உள்ள செளதி அரேபிய தூதரகத்தில் இருந்து அனைத்து ஊழியர்களும் உடனே நாடு திரும்புவர்; செளதி அரேபியாவில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகள் அனைவரும் 48 மணிநேரத்தில் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்தார். மேலும் ஈரானின் வரலாறு நெடுகவும் அரபு நாடுகளுடன் மோதல் போக்கைத்தான் கடை பிடித்து வந்துள்ளது என்றும் அவர் சாடினார்.
ஹஜ் யாத்திரிகர்கள் கடந்த ஆண்டு நெரிசலில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த சம்பவத்திலும் செளதி மீது ஈரான் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications