சவுதி அரேபியா: வீட்டில் ஹீட்டர் வெடித்து கேரள தம்பதி குழந்தையுடன் கருகி மரணம்
திருவனந்தபுரம்: சவுதி அரேபியாவில் வீட்டில் ஹீட்டர் வெடித்த விபத்தில் தூங்கிக் கொண்டிருந்த கேரள தம்பதியினர் குழந்தையுடன் கருகி மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காயங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 55). இவர் சவுதி அரேபியாவில் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இவரது சகோதரர்களும் அந்த பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார்கள். ரவியின் மனைவி சுதா (வயது 45). தனது 5 வயது- மகன் ஆரோமல் மற்றும் மாமனார் மாதவன் ஆகியோருடன் காயங்குளத்தில் வசித்து வந்தார்.
அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆரோமல் எல்.கே.ஜி. படித்து வந்தான். திருமணமாகி நீண்ட நாட்களுக்கு பிறகு ஆரோமல் பிறந்ததால் அவனை மிகவும் செல்லமாக அவர்கள் வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுதா தனது குழந்தையுடன் கணவரை பார்ப்பதற்காக சவுதி அரேபியாவிற்கு சென்றார். வெள்ளியன்று சவுதிஅரேபியாவில் ரவி தங்கியிருந்த குடியிருப்பில் ரவியும் அவரது மனைவி சுதா, மகன் ஆரோமல் ஆகியோர் தீயில் உடல் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் அங்கு வசிக்கும் ரவியின் சகோதரர்கள் அங்கு சென்று அவர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இதுபற்றி போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், அவர்கள் 3 பேரும் தூங்கிக்கொண்டிருந்தபோது, அந்த அறையில் இருந்த ஹீட்டர் கருவி வெடித்ததால் தீப்பிடித்து உடல் கருகி பலியானது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications