
புர்ஜ் கலிபாவா? நாங்க கட்றோம் பாருங்க! 500 மீட்டர் உயரத்தில் ‘நியோம்’! சவுதி அரேபியாவின் மெகா ப்ளான்
சவுதி அரேபியா : சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 'நியோம்' எனப்படும் முற்றிலும் புதிய ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்பட இருப்பதாகவும், சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சிந்தனையில் உருவான இந்த நியோம் சுமார் 500 மீட்டர் உயரமுள்ள கட்டிடமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
உயரமான கட்டிடங்களின் மீது சவுதி அரேபிய மன்னர்களுக்கு அப்படி என்னதான் ஆசை இருக்கிறதோ நமக்கு தெரியாது. ஆனால் அவர்களுக்கு வானளவு உயர்ந்த கட்டிடங்கள் மீது இருக்கும் ஈர்ப்பும் காதலும் குறைந்ததாக தெரியவில்லை.
அந்த அளவுக்கு நாடு முழுவதும் விண்ணை தொடும் அளவுக்கு ஏகப்பட்ட உயரமான கட்டிடங்கள் அங்கு உள்ளன. ஆனால் 828 மீட்டர் உயர புர்ஜ் கலிபா உட்பட பல கட்டிடங்கள் துபாயின் அடையாளமாக உள்ளன. அதனை எப்படியாவது முறியடிக்க வேண்டுமென்பது சவுதியின் நீண்ட நாள் கனவு.
மீண்டும் மிரட்டும் கொரோனா.. இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு பயண தடை! சவுதி அதிரடி.. ஏன் முக்கியம்

முகமது பின் சல்மான் திட்டம்
இந்நிலையில் தான் சவூதியின் பட்டத்து இளவரசரும், நாட்டின் தற்போதைய ஆட்சியாளருமான முகமது பின் சல்மானின் சிந்தனையில் உருவான நியோம், சுமார் 500 மீட்டர் உயரமுள்ள கட்டிடங்களோடு நீண்ட தூரத்துக்கு கிடைமட்டமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள செங்கடல் கடற்கரையிலிருந்து பாலைவனத்திற்கு இடையில் அமைக்கப்படும் இந்த நியோமில், வானளாவிய கட்டிடங்கள், குடியிருப்பு, சூப்பர் மார்கெட்டுகள், தியேட்டர்கள் மற்றும் அலுவலக என அனைத்தும் இதில் இருக்கும்.

புதிய பிரம்மாண்ட கட்டிடம்
அவை அனைத்தும் அதிவேக சுரங்க ரயில் மூலம் இணைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டே இதுபோன்ற ஒரு அமைப்பை உருவாக்க திட்டமிட்டிருந்தாலும், தற்போதுதான் அது செயல்வடிவம் பெற்றிருக்கிறது. தற்போது நியோம் கட்டிடட்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கும் வடிவமைப்பாளர்கள் தற்போது, அரை மைல் நீளமுள்ள மாடல் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டதோடு, அதில் வெற்றியும் பெற்றிருக்குகின்றனர்.

500 பில்லியன் டாலர்கள்
இந்த திட்டம் முழுமையாக அமைக்கப்பட்டால் இதில் உள்ள ஒவ்வொரு கட்டமைப்பும் உலகின் தற்போதைய மிகப்பெரிய கட்டிடங்களை விட பெரியதாக இருக்கும், அவற்றில் பெரும்பாலானவை குடியிருப்புகளை விட தொழிற்சாலைகள், மால்கள் போன்றவையாகத்தான் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. 2017ஆன் ஆண்டிலேயே இளவரசர் முகமது பின் சல்மானால் அறிவிக்கப்பட்ட இந்த நியோம் திட்டத்திற்கு கடந்த ஆண்டு வரை 200 பில்லியன் டாலர் செலவாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது உள்கட்டமைப்பு உட்பட திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் 500 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் என தெரியவந்துள்ளது.

சவுதியின் திட்டம்
இந்த திட்டம் மூலம் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதும், எண்ணெய் விற்பனையை நம்பாமல் சவூதியின் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதும் முகமது பின் சல்மானின் திட்டத்தின் ஒரு பகுதியாகவுள்ளது. மேலும் சுற்றுலா போன்ற பிற துறைகளும் இத்திட்டத்தின் மூலம் வளர்ச்சியடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ இந்த திட்டம் முழு வடிவம் பெற்றால் ஹாலிவுட் படங்களில் காட்டப்படும் ஃப்யூச்சர் நகரங்களுக்கு இணையாக நியோம் இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.