சவுதி அரேபியா திறக்கும் முதல் மதுபானக் கடை.. வரலாற்றையே மாற்றும் இளவரசர்.. யாரெல்லாம் வாங்கலாம்?
ரியாத்: இஸ்லாமிய நாடான சவூதி அரேபியா தனது முதல் மதுபானக் கடையை நாட்டின் தலைநகரான ரியாத்தில் திறக்கத் தயாராகி வருகிறது. ஆனால் அங்கு யார் யாருக்கெல்லாம் மது கிடைக்கும் என்பது குறித்து வெளியான தகவல்கள் மிக முக்கியமானது ஆகும். இதை பற்றி இப்போது பார்ப்போம்.
இஸ்லாம் மதத்தின் படி மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சவூதி அரேபியாவில் மது அருந்துவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான கசையடி தருவது, மது அருந்துவோரை நாடு கடத்துவது. அபராதம் அல்லது சிறைத்தண்டனை போன்றவற்றை அங்கு வாழும் வெளிநாட்டவர்கள் எதிர்கொள்கின்றனர். அதேநேரம் அண்மைக்காலங்களில் நடந்த சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, சவுதியில் மது அருந்தினால் சவுக்கடி என்பது பெரும்பாலும் சிறை தண்டனைகளால் மாற்றப்பட்டிக்கிறது.

சரி, சவுதியில் மது எப்படி கிடைக்கிறது. வெளிநாட்டு தூதர்கள் அஞ்சல் மூலமாக தங்கள் நாட்டில் இருந்து பெற முடியும். அல்லது கறுப்புச் சந்தையில் மட்டுமே மதுபானம் கிடைக்கிறது. அதாவத சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு, தற்போது ஆட்சி செய்து வருகிறது. இளவரசர் முகமது பின் சல்மான் , எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பி சவுதி அரேபியா இருக்கக்கூடாது என்று நினைத்தார். மேலும் வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கில் வணிக தளங்கள், சுற்றுலா தளங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்பினார். அதன்படி பொருளாதாரத்தை மேம்படுத்த விஷன் 2030' எனப்படும் திட்டங்களை இளவரசர் முகமது பின் சல்மான் முனைப்போடு செயல்படுத்தி வருகிறார்.
அதன் ஒருபகுதியாக இளவரசர் முகமது பின் சல்மான், தலைநகர் ரியாத்தில் முதல் மதுபானக் கடையைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறார். சவுதி அரேபியா அரசாங்கம் கொண்டுவர உள்ள இந்த மதுக்கடை தான் அந்த நாட்டின் முதல் மதுக்கடையாகும். இந்த மதுக்கடையில், முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதர்களுக்கு மது விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு சார்பிலான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரபல செய்தி நிறுவமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் படி, முஸ்லிம் அல்லாத வெளிநாட்டுத் தூதர்கள் மதுவைப் பெறவேண்டுமென்றால், அவர்கள் மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும். அதுவும் எப்படி என்றால், மது வாங்குவதற்கு என்றே உருவாக்கப்பட்டிருக்கும் சவுதி வெளியுறவு அமைச்சகத்திடமிருந்து, அனுமதிக் குறியீட்டைப் பெற்று, மொபைல் செயலி மூலம் பதிவுசெய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் வாங்கும் பொருட்களுடன் மாதாந்திர ஒதுக்கீட்டை மதிக்க வேண்டும் என்று ஆவணத்தில் கூறப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இஸ்லாத்தில் மது அருந்துவது தடை செய்யப்பட்டுள்ளதால், தீவிர பழமை மாறாத முஸ்லீம் நாடாக திகழும் சவுதி அரேபியாவில் சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளில் மதுக்கடையை திறக்கும் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மதச்சார்பற்ற சுற்றுலா, இசை நிகழ்ச்சிகள் மற்றும் திரையரங்குகளுக்கு அனுமதி, பெண்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல், தளவாட மையங்களை உருவாக்குதல் போன்றவற்றை முகமது பின் சல்மான் அனுமதித்துள்ளார். சவூதி அரேபியா நாட்டில் வசிப்போருக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
சவுதி ரியாத்தில் புதிய மதுக்கடை எப்படி: புதிய மதுக்கடை ரியாத்தில் தூதரகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள அதிகம் வசிக்கும் சுற்றுப்புறத்தில் அமையப் போகிறது. இந்த மதுக்கடையில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படும் என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மற்ற முஸ்லீம் அல்லாத வெளிநாட்டினர் கடையில் மது வாங்க முடியுமா என்பது தெளிவாக தெரியவில்லை.. பல லட்சம் வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் வாழ்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோனார் இந்தியா உள்ளிட்ட ஆசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் எகிப்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் கணிசமாக வாழ்கிறார்கள். வரும் வாரங்களில் கடை திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications