ஈரான் மீது ரகசிய தாக்குதல்.. சவுதி, UAE அரங்கேற்றிய நாடகம்.. டெல்லி வெளிச்சத்திற்கு வந்த உண்மை! #GulfWar
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வந்த போர் பதற்றம் தற்போது புதிய, ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஈரான் மீது ரகசிய ராணுவ தாக்குதல்களை நடத்தியதாக வெளியான அறிக்கைகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதுவரையில் ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியிலும், அந்தந்த நாடுகளின் சொத்துக்கள், தளங்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டது. இதேவேளையில் வளைகுடா நாடுகளுக்குள் வந்த டிரோன்களை ஏவுகணை கொண்டு தாக்கி அழிக்கப்பட்டது. ஆனால் முதல் முறையாக ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை ரகசியமாக தாக்கியதாக அறிவித்துள்ளது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ரகசிய தாக்குதல்கள் அமெரிக்கா - இஸ்ரேலை தாண்டி வளைகுடா நாடுகள் மத்தியிலான போராக மாறும் நிலை உருவாகியுள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடி புதிய ஆபத்து கட்டம்
பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதுடன் மத்திய கிழக்கில் போர் தொடங்கியது. அதற்குப் பிறகு ஈரான் வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க படைகள், ராணுவ தளங்கள், அமெரிக்க நிறுவனங்களின் அலுவலகங்கள் என பல இடங்களை டார்கெட் செய்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
இதில் விமான நிலையங்கள், எண்ணெய் வசதிகள், ராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் சேதம் அடைந்தது. இதன் விளைவாக உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக பாதையான ஹார்முஸ் நீரிணை அருகே உள்ள கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சவுதி அரேபியா தனது விமான படையை பயன்படுத்தி ஈரானுக்குள் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பின்பு சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஈரானை தங்களுக்கு முக்கிய பிராந்திய எதிரியாகப் பார்க்க துவங்கியுள்ளன.

ஈரானின் முக்கிய குற்றம்சாட்டு
ஈரான் இப்போது ஐக்கிய அரபு அமீரகத்தை நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற BRICS உச்சி மாநாட்டில் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, ஐக்கிய அரபு அமீரகம் அமெரிக்கா-இஸ்ரேல் போரில் "ஆக்டிவ் பார்ட்னர்" என்று குற்றம் சாட்டினார்.
ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நேரடியாக பங்கேற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகம் இதை மறுத்துள்ளது.
இதேபோல் சவுதி மீது ஈரான் குற்றச்சாட்டு வைத்துள்ளது, அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான தாக்குதல் காலத்தில் சவுதி அரேபியாவில் இருக்கும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட பிறகு ஈரானை சவுதி அரசு அழைத்தது. இதில் ஈரான் தொடர்ந்து சவுதி மீது தாக்குதல்கள் நடந்தால் மேலும் பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்ததாகவும் தெரிவித்தார் அப்பாஸ் ஆரக்ச்சி. இருப்பினும், இரு தரப்பினரும் முழு அளவிலான போரை தவிர்க்க ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
பரந்த போர் அபாயம்
இந்த சம்பவங்கள் மத்திய கிழக்கு மோதல் இஸ்ரேல் - ஈரான்- அமெரிக்கா ஆகிய 3 நாடுகளுக்கு அப்பால் பரவி, மொத்த வளைகுடா நாடுகளையும் உள்ளடக்கிய பெரிய போராக மாறும் அபாயத்தை அதிகரித்துள்ளது.
அப்படி வளைகுடா நாடுகள் மத்தியிலான போர் வெடித்தால், எண்ணெய் உற்பத்தி மற்றும் சப்ளையில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டு விலை தாறுமாறாக உயரும், இது ஏற்கனவே மோசமாக இருக்கும் சர்வதேச சந்தையை நிலையற்ற மாற்றும்.
-
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
பயிர் கடன் ரூ.75000 தள்ளுபடி விடுங்க! இப்படியொரு விஷயம் நடந்திருக்கு.. மொத்த விவசாய துறையும் ஹேப்பி! -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்!












Click it and Unblock the Notifications