மாடு, கழுதை என்று திட்டிய கணவன்… வழக்கு போட்ட சவுதி மனைவி
ஜெட்டா: சவுதி அரேபியாவில் மாடு, கழுதை என்று பொது இடத்தில் திட்டிய கணவனை கோர்ட்டுக்கு இழுத்துள்ளார் மனைவி.
இது குறித்து சவுதி கெசட்டில் கூறியிருப்பதாவது:
சவுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை), கிரிமினல் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது கணவர் அடிக்கடி தன்னை மாடு, கழுதை என்று திட்டி அவமானப்படுத்துகிறார். அத்துடன் தகாத வார்த்தைகளில் அசிங்கமாக பேசுகிறார். பொது இடங்கள் என்று கூட பார்க்காமல், மாடு, கழுதை என்று திட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று புகார் கூறியுள்ளார்.
இதையடுத்து பெண்ணின் கணவரை ஆஜர்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கணவன்மார்கள் தகாத வார்த்தைகளால் திட்டுவதாக சவுதி கோர்ட்டில் வழக்கு தொடர்வது அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதற்கிடையில் கணவன், மனைவிக்குள் சமரசம் ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications