நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த நேபாளத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு... மாணவர்கள் ஹேப்பி!
காத்மாண்டு: நிலநடுக்கத்தால் நிலை குலைந்து போன நேபாளத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப் பட்டுள்ளன. நிலநடுக்க பீதி காரணமாக இப்புதிய பள்ளிக்கூடங்கள் மூங்கிலால் அமைக்கப் பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி நேபாளத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு நில அதிர்வுகள் உணரப் பட்டு வருவதால் அங்குள்ள மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

இந்நிலையில், நேபாளத்தில் நிலநடுக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப் பட்டுள்ளன. கால்பந்து மைதானத்தில் தற்காலிமாக மூங்கில்களால் வேயப்பட்ட கூடாரத்தில் இப்பள்ளிகள் செயல்படுகின்றன.
நிலநடுக்க பீதி காரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளை வெளியே அனுப்ப அஞ்சுகின்றனர். அத்தகைய பெற்றோர்களை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து, ‘மீண்டும் பள்ளிக்கும் வந்தால் குழந்தைகள் புத்துணர்ச்சி அடைவார்கள்' என எடுத்துக் கூறி, அவர்களைப் பள்ளி அழைத்துச் செல்கின்றனர்.
ஆசிரியர்களின் வார்த்தையை மெய்ப்பிப்பது போல, நீண்ட நாட்களாக பீதியுடன் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்த குழந்தைகளுக்கு இப்பள்ளிகள் புத்துணர்வு முகாமாகத் தான் இருக்கிறது.
மீண்டும் பழைய நண்பர்களைப் பார்த்த மகிழ்ச்சி குழந்தைகள் முகத்தில் தெரிவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications