மண்டையை போட்டு குழப்பிக்கொள்ளும் ஆய்வாளர்கள்.. விந்தணு பற்றி தெரியாத ரகசியம்! இது புதுசா இருக்கே!
பிரிட்டன்: விந்தணுக்கள் மட்டும்தான் உடலுக்கு வெளியே உயிர்வாழக்கூடிய ஒரே மனித செல். ஆனாலும் அதைப்பற்றி நமக்கு அதிகம் தெரியாது. இதுவரை நாம் கண்டுபிடித்ததை விடவும், இன்னும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டியது அதிகம் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வுகள் குறித்து ஆய்வாளர்கள் சில தகவல்களையும், சந்தேகங்களையும் பகிர்ந்திருக்கின்றனர்.

5 கோடி விந்தணுக்கள்
ஒவ்வொரு நொடிக்கும் ஆண்களின் உடலில் சுமார் 15,000 விந்தணுக்கள் உருவாகின்றன. இதை இப்படிக்கூட புரிந்துக்கொள்ளலாம். அதாவது ஒவ்வொரு இதயத் துடிப்பின்போதும், ஒரு ஆணின் உடலில் சுமார் 15,000 விந்தணுக்கள் உற்பத்தியாகின்றன. உடலுறவின்போது நாம் 5 கோடி விந்தணுக்களை வெளியேற்றுகிறோம். ஆனாலும் ஏதோ ஒன்றுதான் கரு முட்டையை சென்றடைகிறது. எதனால் இவ்வளவு சிக்கல்கள்? விந்தணு எப்படி சரியாக கரு முட்டையை நோக்கி செல்கிறது? என்கிற கேள்விகளுக்கு இன்னமும் விடை தெரியவில்லை.
அறிவியல் தேடும் விடை
இப்போது அறிவியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன், விதைப்பையில் விந்தணு உருவாவது தொடங்கி, அது கரு முட்டையை அடையும் பயணம் வரை, விஞ்ஞானிகள் துல்லியமாக கண்காணித்துள்ளனர். இதன் மூலம் விந்தணுக்கள் எப்படி நீந்துகின்றன? கருமுட்டையை சரியாக எப்படி அடைகின்றன என்பதற்கான விடை தெரிய வந்திருக்கிறது.
ஆய்வாளர்கள் சொல்வதென்ன?
இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் உடல் வளர்ச்சி ஆய்வு பிரிவின் இணைப் பேராசிரியர் ஆடம் இது குறித்து கூறுகையில், "விந்தணுக்கள் மற்ற உயிரணுக்களிலிருந்து மிகவும் வித்தியாசமானவை. அவை ஆற்றலைச் சரியாகக் கையாளுவதில்லை. மற்ற செல்களில் காணப்படும் வளர்சிதை மாற்ற வழிமுறைகள் அவற்றில் இல்லை. விந்தணுக்கள் உடலுக்கு வெளியே உயிர்வாழக்கூடிய ஒரே மனித செல். அவை மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், அவற்றின் சிறிய அளவு காரணமாக, அவற்றை புரிந்துக்கொள்வது கஷ்டமாக இருக்கிறது.
நமக்கு மனித இனப்பெருக்கம் குறித்து சில விஷயங்கள் தெரிந்திருந்தாலும், இன்னும் தெரியாதது நிறைய இருக்கிறது. நாம் கடந்த 350 ஆண்டுகளாக விந்தணுக்களை ஆய்வு செய்து வருகிறோம். இன்று வரை, இந்த விந்தணுக்கள் எதனால் ஆனவை? என்பதற்கு பதில் கிடைக்கவில்லை.
விந்தணு ரகசியம்
நமக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டவரை, விந்தணுக்கள் என்பது, 'ஒரு பையில் அடைக்கப்பட்ட டிஎன்ஏ' என்றுதான் தெரியும். ஆனால், அது மிகவும் சிக்கலான செல். அதில் நிறைய மரபணுத் தகவல்கள் உள்ளன. விந்தணுக்கள் தந்தையின் குரோமோசோம்களை மட்டுமல்ல, மரபணுத் தகவல்களையும் கடத்துகின்றன. இது கருவின் வளர்ச்சி மற்றும் குழந்தையின் எதிர்கால பாதையை தீர்மானிக்கிறது.
விந்தணு பிறப்பும் இறப்பும்
விந்தணுக்கள் பருவமடைந்த பிறகு உருவாகத் தொடங்குகின்றன. அவை விதைப்பையில் உள்ள செமினிஃபெரஸ் குழாய்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை உருவாகும்போது சாதாரணமாக வட்டமாக இருக்கும். ஆனால், பின்னர் தலையும், வாலும் முளைக்கும். உடலில் வேறு எந்த செல்லும் இப்படி வளர்வதில்லை. வித்தியாசமாக இப்படி உருவாகும் விந்தணுக்கள் முதிர்ச்சியடைய சுமார் ஒன்பது வாரங்கள் ஆகும். வெளியேற்றப்படாத விந்தணுக்கள் இறந்து உடலில் மீண்டும் உறிஞ்சப்படுகின்றன.
சகாச ரெய்டு
வெளியேற்றப்படும் விந்தணுக்கள் ஒரு சாகச ரெய்டை தொடங்குகிறது. அது கருமுட்டையை தொட வேண்டும். ஒவ்வொரு விந்தணுவும் முட்டையை நோக்கி நீந்த வேண்டும். விஞ்ஞானிகள் இப்போதுதான் விந்தணுக்கள் எப்படி நீந்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். முழுமையாக அல்ல. எனவே சில கோட்பாடுகளை முன்வைத்திருக்கின்றனர்.
புதிய கோட்பாடு
5 கோடி விந்தணுக்களில் ஒன்றோ, இரண்டோதான் கருமுட்டையை அடைகிறது. மீதி தவறான திசையில் சென்றுவிடுகிறது. சரி முட்டையை நோக்கி எப்படி விந்தணுக்கள் சரியாக போகின்றன? கரு முட்டை ஒரு வித்தியாசமான ரசாயனத்தை வெளியிட்டு, விந்தணுவை ஈர்க்கின்றன. விந்தணுக்கள் இந்த சுவையை டேஸ்ட் செய்தவாறு முட்டையை சென்றடைகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது வெறும் கோட்பாடுதான், இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
இது முக்கியம்
சரி வந்த வேலை முடிந்தது என்று, கரு முட்டையை சென்றடைந்த விந்தணு சும்மா இருப்பதில்லை. முட்டையை சுற்றி 3 அடுக்கு லேயர் இருக்கும். இதை துளைத்துதான் உள்ளே போக முடியும். இதை விந்தணு எப்படி செய்கிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
சரி ஏன் இப்போது இதைப்பற்றிய ஆராய்ச்சி தேவைப்படுகிறது? என்று கேட்கிறீர்களா! மனித இனம் மேலும் வளர வேண்டும் எனில் இனப்பெருக்கம் பற்றிய புரிதல் வேண்டும். ஏனெனில் உலகில் 6 ஆண்களில் ஒருவர் மலட்டுத்தன்மையுடன் இருக்கிறார். இப்படியே போனால் பிரச்சனை தீவிரமாகும். எனவே இதை சரி செய்யவே இந்த ஆராய்சி தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications