பீதியை கிளப்பும் பறவை காய்ச்சல்.. கலங்கும் மக்கள்.. எப்படி பரவுகிறது தெரியுமா.. விஞ்ஞானிகள் விளக்கம்
பெய்ஜிங்: சீனாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து பறவை காய்ச்சல் பீதி உலகம் முழுவதும் பரவி வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்று வைரஸானது உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளையும், பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. பின்னர் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்ததால் நிலைமை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டோம் என உலகமே பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் நிலையில், புதிய காய்ச்சல் ஒன்று தற்போது மீண்டும் மனித சமூகத்தை மூச்சடைக்க செய்யும் நிலைக்கு ஆளாக்கியுள்ளது.

அதாவது சீனாவில் பறவை காய்ச்சல் பாதிப்பால் 56 வயது பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால்தான் அச்சம் உருவாகியுள்ளது. இந்த வகை காய்ச்சல் H3N8 எனும் வைரசால் பரவுகிறது. இந்த வைரஸ் பறவைகளையும், கால்நடைகளையும் மட்டுமே தாக்கி வந்த நிலையில் முதன் முறையாக மனிதர்களை தாக்கி மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உயிரிழப்புதான் பறவை காய்ச்சலால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்று உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், "சீனாவில் மட்டும் 3 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொதுவாக பறவை காய்ச்சல் மனிதர்களிடம் பரவாது. ஆனால், இது தற்போது மனிதர்களிடம் பரவியிருப்பது குறித்து நாங்கள் தீவிரமான ஆய்வை மேற்கொண்டோம். ஆய்வில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, முதல் தொற்று பாதிப்பு கடந்த ஆண்டு ஏற்பட்டிருக்கிறது. இது முதலில் ஒரு குழந்தையைதான் பாதித்திருக்கிறது. அதன் பின்னர் மற்றொரு குழந்தையை பாதித்திருக்கிறது.

இரண்டு பாதிப்புகளும் சீனாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு குழந்தை தீவிரமான சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு அனுமதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்ததில் குழந்தையின் ரத்தத்தில் H3N8 வைரஸ் பாதிப்பு இருப்பதை மருத்துவர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து குழந்தை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த குழந்தை யார்? குடும்ப பின்னணி என்ன? என்பது குறித்து விசாரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, குழந்தையின் குடும்பம் கூட்டுக்குடும்பமாகும். அவர்கள் தங்கள் தோட்டத்தில் பறவை பண்ணையை வைத்திருந்திருக்கின்றனர். அதுபோல ஏராளமான காட்டு பறவைகளும் இவர்கள் வீட்டின் தோட்டத்தில் வந்திருக்கிறது. இதன் மூலம் வைரஸ் பரவியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல 2022ம் ஆண்டு மே மாதம் மற்றொரு குழந்தையிடம் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இக்குழந்தை கோழி பண்ணைக்கு அருகில் வசித்து வந்திருக்கிறது. தற்போது இரண்டு குழந்தைகளும் குணமடைந்துள்ளது.

இதேபோலதான் குவாங்டாங் மாகாணத்தை சேர்ந்த 56 வயது பெண்மணி தீவிர நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதித்ததில் அவருக்கும் H3N8 பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்ற இரண்டு நோயாளிகளை போல இவரது வீட்டின் அருகே கோழி பண்ணையும், காட்டு பறவைகளும் அதிக அளவில் இருந்ததுள்ளன. இவர் மார்ச் மாதம் 3ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி 16ம் தேதி உயிரிழந்தார். இதில் நாம் பயப்படாமல் இருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
அதாவது இந்த H3N8 வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவாது. இருப்பினும் உயிரிழந்த பெண்மணியின் இருப்பிடம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் குறித்து ஏகப்பட்ட வதந்திகள் பரவி வருகின்றன. அதையெல்லாம் நம்ப வேண்டாம். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில அறிகுறிகள் இருக்கும் அதை வைத்து இந்த பாதிப்பை உறுதி செய்துகொள்ளலாம். H3N8 வைரஸ் பாதிக்கப்பட்டால் சுவாச பாதிப்பு இருக்கும். மேலும் காய்ச்சலும் தீவிரமாக இருக்கும் இதுதான் இதன் அறிகுறிகள். எனவே சாதாரண காய்ச்சலுக்கு பயப்படாமல் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள்" என்று கூறியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications