தேனீக்கள் மூலம் ஒரு சில நொடிகளில் கொரோனா பாதிப்பை கண்டறியலாம்.. நெதர்லாந்து ஆய்வாளர்கள் அசத்தல்
ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து, அதன் நுகர் திறன் மூலம் கொரோனாவை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
உலக நாடுகள் கொரோனாவின் கோரத் தாண்டவத்திலிருந்து இன்னும் மீளவில்லை. பல நாடுகளிலும் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலை தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்படும் குறிப்பிட்ட சதவிகித நோயாளிகள் எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத asymptomatic கொரோனா நோயாளிகளாக உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்துவது பெரும் பணியாக உள்ளது.
கொரோனாவை கண்டறிய தற்போது பல சோதனை முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானது RT PCR சோதனை. ஆனால் இதில் முடிவுகள் தெரியவர சில மணி நேரங்கள் வரை ஆகும். அதற்குள் அந்த நபர் பலருக்கு கொரோனாவை பரப்பி விடுகிறார்.
இந்நிலையில் நெதர்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்களை கொரோனாவை எளிதில் கண்டறிய புதியதொரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் தேனீக்களுக்குப் பயிற்சி அளித்து, அதன் நுகர் திறன் மூலம் கொரோனாவை கண்டறிய முடிவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் ஒரு சில நொடிகளில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிந்துவிட முடிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விலங்குகள் மூலம் கொரோனாவை கண்டறிய எடுக்கப்படும் முதல் முயற்சி இது இல்லை.
ஏற்கனவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நாய்களின் மோப்ப சக்தி மூலம் கொரோனாவை கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர். நாய்கள் 94% வரை கொரோனாவை சரியாகக் கண்டறிவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications