ஏலியன்கள் வாழும் கிரகம்.. ரேடியோ சிக்னலை தேடிய விஞ்ஞானிகள்! ஷாக் ரிசல்ட்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஏலியன்கள் இருக்கிறதா? இல்லையா? என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இப்படி இருக்கையில், பூமியிலிருந்து சுமார் 124 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் ஏலியன்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சரி அந்த ஏலியன்கள் நம்மை போலவே டெக்னாலஜியை பயன்படுத்துகிறதா? என கண்டறிய அந்த கிரகத்திலிருந்து ரேடியோ சிக்னல் வருகிறதா? என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

K2-18b என பெயரிடப்பட்ட கோளில், ஹைட்ரஜன் அதிகம் இருப்பதாகவும் நம் உலகத்தில் இருப்பதை போல கடல்கள் அங்கு இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. குறிப்பாக டைமெத்தில் சல்பைடு இந்த கிரகத்தின் வளிமண்டலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டைமெத்தில் சல்பைடு என்பது உயிர்கள் இருந்தால் மட்டுமே உருவாகும்.

Search for Alien Technosignatures

எனவே K2-18b கிரகத்தில் டைமெத்தில் சல்பைடு கண்டுபிடிக்கப்பட்ட உடன், அங்கு உயிர்கள் இருப்பதற்கான முதற்கட்ட ஆதாரம் நமக்கு கிடைத்தது. இந்த கோள், பூமியை போலவே அதன் சூரியனுக்கு போதுமான தூரத்தில்தான் சுற்றி வருகிறது. எனவே, நிச்சயம் அங்கு உயிர்கள் இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

பிரச்சனை என்னவெனில், அங்கு எந்த மாதிரியான உயிர்கள் இருக்கின்றன என்பது நமக்கு தெரியாது. அங்கு வாழும் ஏலியன்கள் டெக்னாலஜியில் மேம்பட்டவையாக இருந்தால் நம்முடைய கதை காலி. எனவே இதை தெரிந்துக்கொள்ள, கார்ல் ஜி. ஜான்ஸ்கி வெரி லார்ஜ் அர்ரே மற்றும் மீர்காட் ஆகிய 2 பெரிய ரேடியோ ஆய்வகங்களைப் பயன்படுத்தி அந்த கோளிலிருந்து சிக்னல் வருகிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வை மான்செஸ்டர் பல்கலைக்கழகம் மற்றும் பெர்க்லி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தலைமையிலான குழு நடத்தியது. நாசா தனது ஜேம்ஸ் வெப் தொலை நோக்கியை இந்த ஆய்வு பயன்படுத்த அனுமதித்தது. எனவே இந்த கோள் தொடர்பான ஆராய்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆனால், அந்த கோளிலிருந்து எந்த சிக்னலும் வரவில்லை. அப்படியெனில் அங்கு உயிர்களே இல்லையா? என்று அர்த்தம் கிடையாது. உயிர்கள் இருக்கின்றன. ஆனால், அவை டெக்னாலஜியை பயன்படுத்தும் அளவுக்கு அறிவு கொண்டவை கிடையாது. எனவே அது எந்த வகையான உயிர்கள்? எப்படி அங்கு வாழ்கின்றன? என்பதை கண்டுபிடிக்க நாசா அடுத்தக்கட்ட முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+