தாலிபான்களுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட ரெடி.. ஆண்டனி பிளிங்கன் அதிரடி அறிவிப்பு! "கண்டிஷன் அப்ளை"

Subscribe to Oneindia Tamil

காபூல்: தாலிபான்கள் தங்கள் மக்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளின் "அடிப்படை உரிமைகளை" மதித்தால் மற்றும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கவில்லை என்றால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

சிஎன்என் செய்திச் சேனலுக்கு ஆண்டனி பிளிங்கன் அளித்த பேட்டியில் இதை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில், தாலிபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றிய நிலையில், அதிபராக இருந்த அஷ்ரப் கானி, பதவியை ராஜினாமா செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.

ஆயுத அடக்குமுறை

ஆயுத அடக்குமுறை

சில தினங்களுக்கு முன்பு, இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட 12 நாடுகளின் பிரதிநிதிகள், தோஹா நகரில் நடத்திய கூட்டத்தின்போது, ஆயுதப் போராட்டம் மூலம் ஆப்கன் கைப்பற்றப்பட்டால், அந்த நாட்டை அங்கீகரிக்க மாட்டோம் என அறிவித்தன. இந்த நிலையில்தான், தாலிபான்களை ஜோ பிடன் நிர்வாகம் அங்கீகரிக்குமா என்ற கேள்விக்கு ஆண்டனி பிளிங்கன் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதை பாருங்கள்:

பெண்கள் உரிமை

பெண்கள் உரிமை

பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்காத அரசு, பயங்கரவாதக் குழுக்களுக்கு அடைக்கலம் தராத அரசாக தாலிபான்கள் ஆட்சி நடத்தினால், அதை அமெரிக்கா அங்கீகரிக்கும் என்றார் ஆண்டனி பிளிங்கன்.

சர்வதேச புறக்கணிப்பு

சர்வதேச புறக்கணிப்பு

ஒரு அரசு அமையும்போது, ​​அவர்களுக்கு சர்வதேச சமூகத்தின் உதவியும் சர்வதேச சமூகத்தின் ஆதரவும் தேவைப்படலாம். பெண்களுக்கு உரிமை வழங்காவிட்டால், தீவிரவாதிகளுக்கு ஆதரவு கரம் நீட்டினால், சர்வதேச சமூகம், ஆப்கன் மீது போட்ட தடைகள் நீக்கப்படாது. எனவே அவர்கள் வேறு எங்கும் பயணம் செய்ய முடியாது.

அமெரிக்கா நிலைப்பாடு

அமெரிக்கா நிலைப்பாடு

பேச்சுவார்த்தை, அமைதியான மற்றும் அரசியல் தீர்வு உலக நாடுகளின் விருப்பமாக உள்ளது. இந்த நிலையில்தான், கடந்த, ஜூலை மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, "தாலிபான்கள் சர்வதேச அங்கீகாரத்தை பெற ஒரே ஒரு பாதைதான் இருக்கிறது. மோதலை அமைதியான வழியில் தீர்ப்பதுதான் அது" என்று, ஆண்டனி பிளிங்கன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Recommended Video

    America, Afgan Army-யின் 20 ஆண்டு உழைப்பை 2 மாதத்தில் காலி செய்த தாலிபான் | Oneindia Tamil
    பெண்களுக்கு கட்டுப்பாடு

    பெண்களுக்கு கட்டுப்பாடு

    தாலிபான்கள் தீவிரமான அடிப்படைவாத கொள்கைகளை செயல்படுத்திய வரலாறு கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பெண் கல்வி தடுக்கப்படும், உடல் பாகங்கள் வெளியே தெரியும் வகையில் ஆடை அணிய அனுமதி கிடையாது, ஆண்கள் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என பல கட்டுப்பாடுகள் உண்டு. இதுபோன்ற விஷயங்களில் தாலிபான்கள் கடுமை காட்டக் கூடாது என்பதுதான் ஆண்டனி பிளிங்கனின் தற்போதைய பேட்டி சாராம்சமாக உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+