பிள்ளையைப் பெற்றால் மட்டும் போதாது.. இந்த சிறுவனின் நிலையைப் பாருங்கள்!
லண்டன்: இங்கிலாந்தில் 8 வயது சிறுமியை கடந்த 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து சித்திரவதை செய்த சிறுவன் பிடிட்டுள்ளான்.
ஆனால் அந்த சிறுவனின் குடும்பப் பின்னணியை அறிந்த கோர்ட், அவனுக்குத் தண்டனை தராமல் விடுவித்துள்ளது.
தனக்கு 10 வயதாகவும், அந்த சிறுமிக்கு 6 வயதாக இருக்கும்போதும் இந்த செயலில் ஈடுபட்டுள்ளான் அச்சிறுவன். இந்த விபரீத செயலுக்குக் காரணமாக அமைந்தது இன்டர்நெட் ஆபாசப் படங்கள்தான். இன்டர்நெட்டில் அதி தீவிரமான ஆபாசப் படங்களைப் பார்த்து கெட்டுப் போய் இப்படி நடந்து கொண்டுள்ளான் அச்சிறுவன்.
தனது வீட்டில் மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்திருப்பானாம் இச்சிறுவன். அதில் எப்போது பார்த்தாலும் ஆபாசப் படங்களையே பார்த்து வந்துள்ளான். இவனை அவனது பெற்றோர் கண்டு கொள்வதே இல்லையாம். இது அவனது மனதில் வக்கிரம் வளரக் காரணமாக அமைந்து விட்டது.
இதையடுத்து தான் கம்ப்யூட்டரில் பார்த்த ஆபாசச் செயல்களை அந்த சிறுமியிடம் பரீட்சித்துப் பார்க்க ஆரம்பித்துள்ளான். அதன் பின்னர் தைரியம் வந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளான்.
சிறுவன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் நிறுத்தப்பட்டான். அவனிடம் விசாரணை நடத்திய நீதிபதி, சிறுவனின் குடும்பப் பின்னணி குறித்து விசாரணை நடத்தினார். பின்னர் சிறுவனுக்குத் தண்டனை தேவையில்லை என்று கூறி விடுதலை செய்தார்.
சிறுவனின் வீட்டில் பாலியல் விஷயங்கள் மிகவும் மோசமாக இருந்துள்ளது. அதாவது சிறுவன் தனது தாயார் பாலியல் உறவுகளைக் கொள்வதை பலமுறை நேரில் பார்த்துள்ளானாம். அவனது தாயாரும், தனது மகன் ஆபாசப் படங்கள் பார்ப்பதை பலமுறை பார்த்துள்ளதாக கோர்ட்டில் தெரிவித்தார். அதைத் தடுக்க அவர் முயற்சிக்கவில்லை.
இந்த சிறுவன் 9 வயது முதலே ஆபாசப் படங்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளான்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறுகையில், மிகவும் மோசமான பெற்றோர் அன்பு இந்த சிறுவனுக்குக் கிடைத்துள்ளது. பெற்றோர் மிகவும் பொறுப்பற்றத்தனமாக நடந்துள்ளனர். இது இந்த சிறுவனின் தவறு கிடையாது. பெற்றோர்களின் அலட்சியமே இதற்குக் காரணம். இது மிகவும் வருத்தம் தருகிறது.
மேலும் இந்த சிறுவனை, இவனது தாயாரின் காதலரும் பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட செயல்களைப் பார்த்துத்தான் இந்த சிறுவன் தவறான வழிக்குப் போயுள்ளான்.
சிறுவனின் வீட்டில் பாலியல் விஷயங்களுக்குக் கட்டுப்பாடோ, எல்லைகளோ எதுவுமே இல்லை. தனது தாயார் தனது காதலருடன் உறவு கொள்வதையும் இவன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் நீதிபதி.
மேலும் அவர் கூறுகையில், இந்த சிறுவன் செய்த செயல் மிகவும் தீவிரமானது. ஆனால் இவனை சிறையில் அடைப்பதை விட சீர்திருத்த நல்ல மனிதனாக மாற்றுவதுதான் சரியான செயலாக இருக்க முடியும். எனவே இவனுக்கு சிறைத் தண்டனை விதிக்கவில்லை. மாறாக சீர்திருத்தம் செய்து இவனை நல்வழியில் திருப்ப உத்தரவிடுகிறேன் என்று கூறினார்.
தற்போது இந்த சிறுவன், ஒரு சிறப்பு சீர்திருத்த இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளான்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications