For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏமன் தலைநகர் சனாவை "ஈரான்" உதவியுடன் கைப்பற்றிய ஷியா போராளிகள்!

By Mathi
Google Oneindia Tamil News

Seizure of Sanaa a ‘gift’ for Tehran?
சனா: ஏமன் நாட்டின் தலைநகர் சனாவை சன்னி முஸ்லிம்களின் ராணுவத்திடம் இருந்து ஈரான் ஆதரவுடன் ஷியா முஸ்லிம் போராளிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஏமன் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவரான அப்துல்லா சலேவின் 33 ஆண்டுகால ஆட்சிக்கு சன்னி பிரிவு ஆயுததாரிகள் கடந்த 2011ஆம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் சன்னி முஸ்லிம்களின் ராணுவத்தின் கை ஓங்கி இருக்கிறது,.

இதற்கு எதிராக ஷியா ஹாதிப் போராளிகள் உள்நாட்டுப் போரை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக தலைநகர் சனாவை முற்றிலும் தங்களது வசம் கொண்டுவந்துள்ளனர்.

தலைநகர் சனாவில் இருந்த ராணுவ தளங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தையும் கைப்பற்றினர். ஷியா முஸ்லிம்களின் இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணியில் ஈரானின் தூண்டுதல் இருக்கக் கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

அரேபிய தீபகற்பகத்தில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் ஷியா முஸ்லிம் போராளிகளுக்கு ஈரான் அரசு உதவி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

English summary
The lightning takeover by Shiite rebels of Yemen’s capital this week is a potential boost for Iran, while the US is preoccupied with fighting radicals, analysts said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X