ஃபேஸ்புக்கில் பழகி பலாத்காரம் - ஆட்டோ சங்கர் பாணியில் பெண்களை கொன்று புதைத்த சீரியல் கில்லர்
ஃபேஸ்புக்கில் பழகி பெண்களை வீட்டுக்கு வரவழைத்த கொடூரன் ஒருவன் அனைவரையும் பலாத்காரம் செய்து வீட்டைச்சுற்றி தோண்டி புதைத்துள்ளான். சீரியல் கொலைகாரனை கைது செய்த போலீசார், சடலங்களை தோண்டி எடுத்த பிரேத பரி
கேப்டவுன்: தோண்ட தோண்ட சடலங்கள், பெண்கள் சிறுமிகள் என பிணங்களைப் பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. தென்னாப்பிரிக்காவின் நும்பி கிராமத்தில் ஜூலியஸ் தபிசோ என்பரின் வீட்டில்தான் அந்த சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. யார் இவர்கள் எதற்காக இப்படி புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.
கடந்த வாரம் இளம் பெண் ஒருவர் மாயமானார். அவரை காணவில்லை என்று போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்தப்பெண் கடைசியாக ஜூலியஸ் என்பவரின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. ஜூலியஸ் அந்த பெண்ணின் ஃபேஸ்புக் நண்பர் என்பதால் அவரது அழைப்பை ஏற்று வீட்டுக்கு சென்றவர் மாயமானார்.

ஜூலியஸ் வீட்டிற்கு சென்ற போலீசார், சாதாரணமாக விசாரித்த போது சமாளித்தான். பின்னர் தங்கள் பாணியில் விசாரித்து உண்மையை வரவழைத்தனர். ஃபேஸ்புக்கில் பழகி வீட்டிற்கு வரவழைத்த ஜூலியஸ் முதலில் அந்த பெண்ணுடன் உறவு கொண்டான். அந்த பெண்ணும் ஒத்துழைத்துழைத்திருக்கிறார். கடைசியில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணை அடித்துக்கொன்று தனது வீட்டைச்சுற்றி இருந்த நிலத்தில் புதைத்து விட்டான்.
இளம் பெண்ணை மட்டுமல்லாது இதே போல நான்கு பெண்களை கொன்று புதைத்திருப்பதாக போலீசில் வாக்குமூலம் அளிக்கவே அவன் சொன்னதைக் கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஞாயிறன்று ஜூலியசின் வீட்டைச்சுற்றி இருந்த நிலத்தில் தோண்டியதில் சடலங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தன. நான்கு பெண்களையும் கடந்த ஆண்டு கொன்று புதைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலை செய்வதற்கு மூன்று பெண்களை பலாத்காரம் செய்து பின்பே அவர்களின் கதையை முடித்திருக்கிறான். ஒரு கொலையில் கைதான ஜூலியஸ் ஐந்து கொலை மற்றும் பலாத்கார வழக்குகளில் சிக்கியுள்ளான். நாளைய தினம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்த உள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களையும் ஆண்களையும் கொன்று வீட்டின் சுவரில் புதைத்து வைத்த ஆட்டோ சங்கரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு தூக்கு தண்டனையும் அளித்தனர். இத்தனை ஆண்டுகள் கழித்து அதுபோல ஒரு சீரியல் கொலையாளியை தென்ஆப்பிரிக்காவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications