6 வருடமாக 6000 கார்களுக்கு பஞ்சர் ஏற்படுத்தியவர்... வளைத்து பிடித்த போலீஸ்.. ஏன் செய்தார் தெரியுமா?
6 வருடமாக 6000 கார்களுக்கு பஞ்சர் ஏற்படுத்திய நபர் பாரிஸில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
பாரிஸ்: 6 வருடமாக 6000 கார்களுக்கு பஞ்சர் ஏற்படுத்திய நபர் பாரிஸில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். போலீசார் இவரை கஷ்டப்பட்டு தேடி வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
இவர் பாரிஸில் பல நாட்களாக இந்த பஞ்சர் செய்யும் வேலையை செய்து இருக்கிறார். இவர் மீது பல மக்கள் கோபமாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
இவர் இந்த பஞ்சர் செய்யும் வேலைக்கு நிறைய திட்டங்களை தீட்டி இருக்கிறார். போலீசாரிடம் தற்போது இவர் தன்னுடைய திட்டங்கள் குறித்து வாக்குமூலம் அளித்து உள்ளார்.

பாரிஸில் பஞ்சர் மேன்
பிரான்சின் பாரிஸில் கடந்த 6 வருடமாக மர்ம நபர் ஒருவர் கார்களில் ஊசியால் குத்தி பஞ்சர் செய்து இருக்கிறார். இந்த ஆறு வருடங்களில் மட்டும் 6,000 க்கும் அதிகமான கார்களுக்கு இவர் பஞ்சர் செய்து இருக்கிறார். இவர் மீது 1,100க்கும் அதிகமான நபர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

போலீஸ் தேடுதல் வேட்டை
இந்த நிலையில் போலீஸ் இவரை தீவிரமாக தேடி வந்தது. இந்த 6 வருடமாக அவர் இணையம் முழுக்க வைரல் ஆகி இருந்தார். பலரும் அவர் மீது கோபமாக கருத்து தெரிவித்து இருந்தனர். சீரியல் கில்லர் என்பது போலவே 'சீரியல் பஞ்சரர்' என்று பெயர் வைத்து இருந்தனர். போலீசுக்கு இவரை பிடிப்பது குதிரை கொம்பாக இருந்தது.

கைது செய்யப்பட்டார்
இந்த நிலையில் இவர் நேற்று கைது செய்யப்பட்டார். நேற்று பாரிஸின் முக்கியமான ஒரு சாலையில் இவர் காருக்கு பஞ்சர் செய்து கொண்டு இருந்த போது கைது செய்யப்பட்டார். தற்போது இவர் போலீசிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் ''எனக்கு பஞ்சர் போடுவது ஆனந்தமாக இருந்தது. ஊசியால் குத்தும் போது சந்தோசமாக இருந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மாஸ்டர் பிளான்
இந்த பஞ்சர் வேலைக்கு அவர் நிறைய திட்டங்கள் வேறு தீட்டி இருக்கிறார். இதற்காக தனி நோட் வாங்கி எந்த தெருவில் எப்போது பஞ்சர் போடலாம், எப்படி சிசிடிவியில் மாட்டாமல் பஞ்சர் போடலாம் என்றெல்லாம் அவர் பிளான் செய்து இருக்கிறார். தற்போது போலீசார் அவரது திட்டங்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications