கோல்ப் மைதானத்தில் தரையிறங்கிய விமானம் நொறுங்கி விபத்து- 7 பேர் பலி
சாந்தோ டோமிங்கோ: டொமினிக்கன் குடியரசு நாட்டில் நடந்த விமான விபத்தில் 6 சுற்றுலா பயணிகள் உடபட 7 பேர் உயிரிழந்தனர்.
இங்கிலாந்து மற்றும் சுவீடனை சேர்ந்த 6 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பூந்தா கானாவில் இருந்து அராயோ பாரிலுக்கு சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென விமானத்தை கோல்ப் மைதானம் ஒன்றில் தரையிறக்க விமானி முயற்சித்ததாகத் தெரிகிறது.

அப்போது கோல்ப் மைதானத்திலேயே விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோல்ப் மைதானத்தில் விமானத்தை தரையிறக்க விமானி முயற்சித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிய விமானியின் பெயர் ஹேக்டோர் சோரியனோ(37) என தெரிய வந்துள்ளது. ஆனால், விமானத்தில் பயணம் செய்த சுற்றுலாப் பயணிகளின் விபரம் தெரியவில்லை.
விபத்தில் பலியான சுற்றுலாப் பயணிகளின் விபரம் மற்றும் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications