தாய்லாந்து குகை மீட்பிற்கு காரணமான ஹீரோ.. தன் உயிரைக் கொடுத்து சிறுவர்களை மீட்ட கதை!

தாய்லாந்து முன்னாள் கடற்படை மேஜர் சாமன் குணனை அந்த நாடே ஹீரோவாக கொண்டாடி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தாய்லாந்தில் மீதமுள்ள சிறுவர்களை மீட்கும் பணி மீண்டும் தொடக்கம்- வீடியோ

    பாங்காக்: தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 13 பேரில் இதுவரை 4 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்காக முக்கிய பணியாற்றி உயிரைவிட்ட தாய்லாந்து முன்னாள் கடற்படை மேஜர் சாமன் குணனை அந்த நாடே ஹீரோவாக கொண்டாடி வருகிறது.

    சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடந்த 16 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.

    சென்ற வாரம்தான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது முதற்கட்ட மீட்பு பணி வெற்றிகரமாக முடிந்து இரண்டாம் கட்ட மீட்பு பணி தொடங்கியுள்ளது.

    ஓய்வு பெற்றவர்

    ஓய்வு பெற்றவர்

    மேஜர் சாமன் குணன், தாய்லாந்தின் கடற்படையில் மேஜராக இருந்தவர். இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் பணி ஓய்வு பெற்றார். கடலுக்கு அடியில் கூட, ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டிக் கொண்டு தாக்கும் வல்லமை படைத்த ஒரு சில தாய்லாந்து வீரர்களில் இவரும் ஒருவர். 38 வயது நிரம்பிய இவர் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க எண்ணி, தானாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    நெருக்கமாக இருந்தார்

    நெருக்கமாக இருந்தார்

    அதிகாரப்பூர்வ ஓய்வு கொடுத்துவிட்டால் கூட, இவர் மனமும் உடலும் மீண்டும் மீண்டும் கடலை தேடி இருக்கிறது. இதனால், தாய்லாந்து கடற்படையால் சீல் படையில் வேலை செய்யும் நபர்களிடம் தினமும் பேசி இருக்கிறார். அதேபோல் விமான நிலையம் ஒன்றில், டிராபிக் கட்டுப்பாட்டாளராக இருந்துள்ளார். ஆனாலும் சீல் படையிடம் நட்பை விடாமல் தொடர்ந்து ஆலோசனையும் வழங்கி வந்திருக்கிறார்.

    முன்வந்தார்

    முன்வந்தார்

    இந்த குகையில் மாட்டிய சிறுவர்களின் பிரச்சனை தெரிந்ததும், மனிதர் முதல் ஆளாக களத்தில் குதித்து இருக்கிறார். பக்கத்தில் இருந்த சீல் அலுவலகத்திற்கு சென்று கடற்படை விமானத்தில் குகை இருக்கும் பகுதிக்கு வந்திருக்கிறார். விமானத்தில் ஏறுவதற்கு முன் ''அந்த சிறுவர்களை சீல் படை காப்பாற்றும். நான் அந்த இடத்திற்கு செல்ல தயாராகிவிட்டேன். அவர்களுக்கு நான் உதவி செய்ய போகிறேன். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்'' என்று வீடியோ வெளியிட்டுவிட்டு சென்றுள்ளார்.

    என்ன வேலை

    மனிதர் அங்கு சென்றதும் உடனே வேக வேகமாக வேலையில் இறங்கி இருக்கிறார். அதோடு, தன்னுடைய பழைய கடற்படை உடையை போட்டுக்கொண்டு வந்து, பழைய படி, துணிச்சலாக குகைக்குள் சென்றுள்ளார். முதலில் அந்த குகைக்குள் குறுகலான பாதையில் எப்படி செல்வது என்று சக பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கி இருக்கிறார். பல வருட அனுபவத்தை எல்லோருக்கும் விளக்கி இருக்கிறார்.

    என்ன வேலை

    அவர் செய்த வேலை இதுதான். சிறுவர்கள் திரும்பும் போது, ஆக்சிஜன் தீர்ந்துவிடும் என்பதால், இடைஇடையே ஆக்சிஜன் சிலிண்டர் மாற்ற வேண்டும். இதற்காக 4.5 கிலோமீட்டர் தூரம் இருக்கும் குகைக்குள், ஆக்சிஜன் சிலிண்டர்களை சில இடங்களில் பொறுத்த இவர் களமிறங்கியுள்ளார். ஆனால் அங்கு எவ்வளவு ஆக்சிஜன் இருக்கும் என்று தவறாக கணிக்கப்பட்டு இருக்கிறது.

    மோசம்

    12ல் இருந்து 20 சதவிகிதம் வரை அங்கு ஆக்சிஜன் இருக்கும் என்று கணக்கிடப்பட்டு பணியை துவங்கி இருக்கிறார்கள். ஆனால் அந்த குகையின் பாதையில் இருந்தது வெறும் 6 சதவிகித ஆக்சிஜன் மட்டும்தான். இதனால் அந்த இடத்திலேயே மேஜர் சாமன் குணன் நிலைதடுமாறினார். தனக்கு கொடுக்கப்பட்ட கடைசி சிலிண்டரை, குகையின் கடைசி பக்கத்தில் வைக்கும் போது, ஆக்சிஜன் இல்லாமல், மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார்.

    இவர்தான் ஹீரோ

    இந்த நிலையில் தற்போது மொத்தமாக 6 சதவிகித ஆக்சிஜனுக்கு ஏற்றபடி அங்கு அதிக அளவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒருவேளை 20 சதவிகித ஆக்சிஜன் இருக்கிறது என்று நினைத்து, சிலிண்டர்களை இறக்கி இருந்தால், மாணவர்கள் மரணம் அடைந்திருப்பார்கள். எல்லா கணக்கையும் சரியாக மாற்ற வைத்து உயிரை கொடுத்து குழந்தைகளை காப்பாற்றிய மேஜர் சாமன் குணனை அந்த நாடே ஹீரோவாக கொண்டாடி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+