பாகிஸ்தானின் 18வது பிரதமராக ஷாஹித் அப்பாஸி தேர்வு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் 18வது பிரதமராக ஷாஹித் ககான் அப்பாஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிப் பனாமஸ் பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பதவியை இழந்தார். இதையடுத்து புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

Shahid Khaqan Abbasi is the new prime minister of Pakistan

இதில் 221 வாக்குகள் பெற்று ஷாஹித் கஹான் அப்பாஸி வெற்றி பெற்றுள்ளார். நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷாபாஸ் எம்பியாகும் வரை அப்பாஸி பிரதமராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாஸி இதுவரை 6 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான், சர்தாரி கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் பிரதமர் பதவிக்கு போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் 18வது பிரதமராக பதவியேற்கவுள்ள அப்பாஸி அந்நாட்டின் முன்னாள் பெட்ரோலிய அமைச்சராக இருந்தவர் ஆவார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Shahid Khaqan Abbasi has been elected the 18th prime minister of Pakistan after he bagged 221 votes during the voting carried out to elect a short-term successor to the ousted prime minister, Nawaz Sharif.
Please Wait while comments are loading...