இந்தியாவுக்கு எதிராக கருத்து கூற கூடாது: அமைச்சர்களுக்கு நவாஸ் ஷெரிப் திடீர் உத்தரவு
இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக கருத்து கூற கூடாது என்று தனது அமைச்சரவை சகாக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உத்தரவு போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் நாளிதழான தி நேஷன் இத்தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது:

கடந்த காலங்களில் செய்ததுபோல அல்லாமல் இந்தியாவுடனான அமைதி பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் வகையில் மட்டுமே அறிக்கைகள் வெளியிட வேண்டும்.
இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும் பேச வேண்டும் என்று இந்திய தலைவர்கள் சிலர் கூறிவருவது நவாஸ் ஷெரிப்புக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இருந்தாலும், இந்திய அரசு அதுபற்றி பேசாது என அவர் புரிந்து வைத்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், பாரிஸில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடி-நவாஸ் ஷெரிப் சந்திப்புக்கு பிறகு இருநாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் ஆஜிஸ் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அடுத்த ஆண்டு, பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் உச்சி மாநாட்டில் மோடி- நவாஸ் ஷெரிப் ஆகியோர் மீண்டும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications