Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷேக் ஹசீனா ஆவேசம்.. "முகமது யூனுஸ் வங்கதேசத்தையே அமெரிக்காவிற்கு விற்கிறார்.." பகீர் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் நாட்டையே அமெரிக்காவுக்கு விற்பதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வங்கதேசத்தில் தனது அவாமி லீக் கட்சியின் மீது விதிக்கப்பட்ட தடையைக் கண்டித்த அவர், அது அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் சாடினார்.

வங்கதேசத்தில் கடந்தாண்டு அப்போதைய பிரதமர் ஹசீனாவுக்கு எதிராக மிகப் பெரிய மாணவர் போராட்டம் வெடித்தது. ஒரு கட்டத்தில் போராட்டம் வன்முறையாக மாறி, பிரதமர் அலுவலகம் நோக்கியும் போராட்டக்காரர்கள் திரண்டனர். இதையடுத்து. ஹசீனா வேறு வழியில்லாமல் இந்தியாவுக்குத் தப்பினார்.

Sheikh Hasina Accuses Militant Mohammed Yunus of Selling Bangladesh to US

இதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வங்கதேச இடைக்கால அரசை வழிநடத்த நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் நியமிக்கப்பட்டார். அதேநேரம் மறுபுறம் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஹசீனா தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாகத் தனது கருத்துகளைத் தொடர்ச்சியாகக் கூறி வருகிறார்.

யூனுஸ் மீது சாடல்

இப்போது அவரது ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தான் அவர் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். முகமது யூனுஸ் நாட்டையே அமெரிக்காவுக்கு விற்பதாகவும், தீவிரவாத குழுக்களின் உதவியுடன் வங்கதேச அரசின் கட்டுப்பாட்டை யூனுஸ் எடுத்ததாகவும் அவர் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "செயிண்ட் மார்ட்டின் தீவை எங்களிடம் தர வேண்டும் என அமெரிக்கா கேட்டபோது அதற்கு என் தந்தை உடன்படவில்லை. அதற்காக அவர் தனது உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தது. அதுதான் எங்கள் நிலைப்பாடு.. ஆட்சியில் நீடிக்க நாட்டை விற்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை.

அமெரிக்காவுக்கு விற்கிறார்

வங்கதேச சுதந்திரத்திற்காக எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானுடன் சேர்ந்து பொதுமக்கள் அனைவரும் ஆயுதம் ஏந்திப் போராடினர். அவ்வளவு கஷ்டப்பட்டு சுதந்திரம் பெற்ற நாட்டின் மண்ணில் ஒரு அங்குலத்தைக் கூட யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். ஆனால், இன்று நிலவும் சூழல் துரதிர்ஷ்டவசமானது. அப்படிப்பட்ட ஒருவர் ஆட்சியில் இருக்கிறார்.. ஒட்டுமொத்த நாடும் மக்களும் நேசித்த ஒருவர் இப்போது ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்கிறார்.. எப்படி நடந்து கொண்டார் என்பதைப் பாருங்கள்.

தீவிரவாதிகளுடன் உதவி

தீவிரவாதக் குழுக்களின் உதவியுடன் யூனுஸ் வங்கதேசத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.. சர்வதேச அமைப்புகளால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு எதிராக நாங்கள் வங்கதேச மக்களைப் பாதுகாத்தோம். ஒரே ஒரு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தோம். பலர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இப்போது அவர்கள் அனைவரையும் விடுவித்துவிட்டார். இப்போது வங்கதேசத்தில் அவர்கள் தான் அதிகாரத்தில் இருக்கிறார்கள்.

பல தியாகங்கள்

வங்கதேச அரசியலமைப்பைப் பெற நாம் நீண்ட போராட்டம் மற்றும் தியாகங்களைச் செய்ய வேண்டி இருந்தது. ஆனால், அதிகாரத்தைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றிய இந்த தீவிரவாத தலைவருக்கு (யூனுஸை குறிப்பிடுகிறார்) அரசியலமைப்பை மீறும் உரிமையை யார் கொடுத்தது? அவர் மக்களின் விருப்பப்படி தேர்வு செய்யப்பட நபர் இல்லை. தலைமை ஆலோசகர் என்ற பதவி இருக்கவே தேவையில்லை. நாடாளுமன்றம் இல்லாமல் அவரால் எப்படி சட்டத்தை மாற்ற முடியும்? அவாமி லீக் கட்சியை அவர் தடை செய்துள்ளது சட்டவிரோதமானது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+