Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குறிவைக்கப்படும் இந்துக்கள்.. உயிருடன் தீ வைத்து எரிப்பு.. வங்கதேசத்தில் பதற்றம்.. ஆவேசமடைந்த ஹசீனா

Subscribe to Oneindia Tamil

டாக்கா: வங்கதேசத்தில் இப்போது மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளது. அங்குள்ள சிறுபான்மை இந்து மதத்தினர் மீது மோசமான வன்முறைகள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையே இப்போது இந்தியாவில் வசித்து வரும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யூனுஸ் அரசே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் சாடியுள்ளார்.

வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஹசீனாவும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதற்கிடையே வங்கதேசத்தில் இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு வசிக்கும் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

Sheikh Hasina Accuses Yunus of Burning Minorities Alive in Christmas Address Amid Bangladesh Unrest

படுகொலை

மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் என்ற தொழிற்சாலை ஊழியர், சக ஊழியரால் அடித்துக் கொல்லப்பட்டார். அவர் நபிகள் நாயகத்தை அவமதித்தாக சொல்லப்பட்டது. இருப்பினும், பிறகு அது பொய்யான புகார் என்பது தெரிய வந்தது. சந்திர தாஸை அடித்துக் கொன்றது மட்டுமின்றி, அவரது உடலை பொது இடத்தில் தீ வைத்து எரித்ததாகவும் புகார்கள் எழுந்தன.

வங்கதேசத்தில் இதுபோல சிறுபான்மையினர் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இது தொடர்பாகச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். தனது கிறிஸ்துமஸ் தின உரையில் யூனுஸ் ஆட்சியை ஹசீனா கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஹசீனா

கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளுடன் தனது உரையைத் தொடங்கிய ஹசீனா, வங்கதேசத்தில் இப்போது நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் குறித்தும் பேசினார். சட்டவிரோதமாக யூனுஸ் கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவித்த அவர், சிறுபான்மையினரைச் சொல்லில் அடங்காத துயரங்களுக்கு ஆளாக்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஒரு காலத்தில் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்த வங்கதேசம் இன்று மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் சாடினார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "வங்கதேசம் ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே தேச தந்தையின் கனவாக இருந்தது. அந்தக் கனவை அடையவே அவாமி லீக் ஆட்சி நடத்தியது. அனைத்து மதத்தினரும் இணக்கமாக வாழ வழிவகை செய்தோம். ஆனால், இப்போது வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பாருங்கள்.

அனுமதிக்க மாட்டார்கள்

சட்டவிரோதமாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஆளும் குழு, அனைத்து மதத்தினரும் தங்கள் மதத்தைப் பின்பற்றுமாறு வலியுறுத்துகிறது. இதனால் மத சுதந்திரத்தைப் பறிக்கப்படுகிறது. வங்கதேசத்தில் நிலவும் காட்சிகளைப் பார்த்தாலே வருத்தமளிக்கிறது.. சிறுபான்மையினர் சொல்லில் அடங்காத துயரங்களை எதிர்கொள்கிறார்கள். மதச்சிறுபான்மையினரை எரிப்பது போன்ற அட்டூழியங்களும் நடக்கிறது. இப்படியொரு மோசமான காலகட்டம் தொடர்வதை வங்கதேச மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்தக் கிறிஸ்துமஸ் நாள் மக்களிடையே நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன். இருள் விலகி, விடியல் தோன்றட்டும்" என்று கூறினார்.

பின்னணி

தீபு சந்திர தாஸ் கொல்லப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு, வங்கதேசத்தில் மற்றொரு இந்து நபர் அடித்து கொல்லப்பட்டார். அவர் சாம்ராட் என்று அடையாளம் காணப்பட்டது.. கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் நாட்டை விட்டு வெளியேறிய சாம்ராட், சமீபத்தில் தான் தனது ஊருக்குத் திரும்பினார். இந்தச் சூழலில் தான் அவரையும் அடித்துக் கொன்றுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களால் வங்கதேசத்தில் பதற்றமான ஒரு சூழலே நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+