ஷேக் ஹசீனாவுக்கு ‛ஆப்பு’.. வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சிக்கு தடை.. முகமது யூனுஸ் அதிரடி அறிவிப்பு
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு வங்கதேசத்தில் தடை விதித்து இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
வங்கதேச பிரதமராக இருந்தவர் ஷேக் ஹசீனா. இவர் நம் நாட்டுடன் நல்ல நட்பில் இருந்தார். பாகிஸ்தான், சீனாவிடம் நெருக்கம் காட்டவில்லை. ஆனால் கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது வன்முறையானது. இதையடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.

தற்போது ஷேக் ஹசீனா நம் நாட்டில் தான் உள்ளார். இதையடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தான் வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக உள்ளார். இவர் நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். அதேவேளையில் சீனா, பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
வங்கதேசத்தில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு தற்போது அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு வங்கதேசத்தில் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டம் வன்முறையானது. இதில் 1,400க்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த கொலை குற்றச்சாட்டு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக உள்ளது. அதேபோல் இன்னும் பல வழக்குகள் ஷேக் ஹசீனா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. இதனால் ஷேக் ஹசீனா கட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வங்கதேசத்தில் மாணவர்கள் அமைப்பினர், எதிர்க்கட்சிகள் முன்வைத்தனர். இதனை பரிசீலனை செய்த வங்கதேச இடைக்கால அரசு ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக வங்கதேச இடைக்கால அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை ஆலோசகரான ஆசீப் நஸ்ரூல் கூறுகையில், ‛‛அவாமி லீக் கட்சியும், அதன் சமூக வலைதள பக்கங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை என்பது பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அவாமி லீக் தலைவர்கள் மீதான விசாரணை முடியும் வரை நடைமுறையில் இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று வங்கதேச இடைக்கால அரசு நம்மிடம் கோரிக்கை வைத்தது. ஆனால் மத்திய அரசு மறுத்தது. தன்மீது வங்கதேச இடைக்கால அரசு பொய் குற்றச்சாட்டில் வழக்குகள் பதிவு செய்வதாக ஷேக் ஹசீனா தெரிவித்து இருந்தார். இதனால் அவர் நாடு கடத்தப்பட்டால் அவரை சிறையில் அடைத்து சித்ரவதை செய்யப்படலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்த முடியாத நிலையில் அவரது அவாமி லீக் கட்சியை முடக்கும் வகையில் வங்கதேச இடைக்கால அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications