"நிலைமை மோசமாகிவிடும்".. ஷேக் ஹசீனாவால் இந்தியாவுக்கு வந்த ‛வார்னிங்’.. அடுத்த ‛ஸ்டெப்’ என்ன?
டாக்கா: வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்து வந்துள்ள ஷேக் ஹசீனாவுக்கு மத்திய அரசு சார்பில் நம் நாட்டில் தற்காலிகமாக அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவின் அடைக்கலத்தால் நம் நாட்டுக்கு புதிய எச்சரிக்கை வந்துள்ளது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இதற்கு காரணம் அங்கு நடந்த மாணவர்கள் போராட்டம் தான். தற்போது தற்காலிகமாக நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா விரைவில் வேறு நாட்டில் அடைக்கலம் செல்ல உள்ளார்.

பிரிட்டனில் ஷேக் ஹசீனா சார்பில் அடைக்கலம் கோரப்பட்ட நிலையில் ஏற்கப்படவில்லை. இதனால் ஷேக் ஹசீனா அமெரிக்கா, பின்லாந்து அல்லது சவூதி அரேபியாவில் அடைக்கலம் செல்லலாம் என்று கூறப்படுகிறது. அதுவரை ஷேக் ஹசீனா நம் நாட்டில் தான் இருக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். நம் நாட்டுன் மிகவும் இணக்கமாக ஷேக் ஹசீனா செயல்பட்டு வந்ததால் அவரது பாதுகாப்பில் மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக மத்திய அரசு புதிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
எங்கே போகிறார் ஷேக் ஹசீனா? களமிறங்கிய இந்தியா.. பிரிட்டனில் இருந்து ஜெய்சங்கரை தேடிவந்த போன்கால்!
இந்நிலையில் தான் ஷேக் ஹசீனாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவது தொடர்பாக நம் நாட்டின் மீது பிஎன்பி எனும் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி கடும் கோபம் அடைந்துள்ளது. இந்த கட்சி என்பது ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அங்கு அரசியல் செய்து வருகிறது. இந்த கட்சியின் தலைவராக முன்னாள் பிரதமர் கலீதா ஜியா உள்ளார். இவரை ஷேக் ஹசீனா சிறையில் அடைத்தார். தற்போது ஷேக் ஹசீனா ராஜினாமா செய்து நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ள நிலையில் கலீதா ஜியா சிறை வாசத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய சூழலில் தான் கலீதா ஜியாவின் பிஎன்பி எனும் பங்களாதேஷ் தேசியவாத கட்சி நம் நாட்டின் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது. இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கயேஷ்வர் ராய் கூறியதாவது: வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான பரஸ்பர உறவை பிஎன்பி கட்சி விரும்புகிறது. அதனை ஆதரிக்கிறது. ஆனால் எங்கள் எதிரிக்கும் இந்தியா உதவி செய்தால் எங்களின் ஒத்துழைப்பை பெறுவதில் கடினமான சூழல் ஏற்படும்.
ஷேக் ஹசீனா மீண்டும் ஆட்சிக்கு வருவதை இந்தியா ஆதரித்தது எங்களுக்கு கவலையளித்தது. தற்போது ஷேக் ஹசீனாவின் பாதுகாப்பை இந்தியா ஏற்றுக்கொள்கிறது. உண்மையில் இந்தியா, வங்கதேசத்தில் வசிக்கும் மக்களிடையே எந்த பிரச்சனையும் இல்லை. இதனால் இந்தியா வங்கதேசத்தை ஊக்குவிக்க வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட கட்சியை அல்ல’’ என சீறியுள்ளார்.
முன்னதாக நம் நாட்டுக்கு வங்கதேச உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஷேக் ஹசீனாவை கைது செய்து வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழலில் தான் கலீதா ஜியாவின் பிஎன்பி எனும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நம் நாட்டின் அடுத்தக்கட்ட ‛ஸ்டெப்’ என்னவாக இருக்கும் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இருப்பினும் கூட மத்திய அரசு ஷேக் ஹசீனாவை கைவிடாது. அவரை பாதுகாப்பாக விரைவில் வேறு நாட்டுக்கு மத்திய அரசு அனுப்பி வைக்கும். அதேபோல் நம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அறிந்து ஷேக் ஹசீனாவும் விரைவில் வேறு நாட்டில் தஞ்சமடைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications