17 வயது பெண்ணை திருமணம் செய்யும் சோயிப் அக்தர்
கராச்சி: ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று செல்லப்பெயரோடு அழைக்கப்படும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தருக்கு ஜூன் 22ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்தகவலை அவரது குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஹரிபுரைச் சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தாக் கானை அக்தர் குடும்பம் கடந்த வருடம் ஹஜ்ஜில் சந்தித்தது. அப்போது முஸ்தாக் கான் மனைவியிடம் தங்களது 39-வயது மகனான சோயிப் அக்தருக்கு பொருத்தமான பெண் இருந்தால் சொல்லவும் என்று கேட்டுக்கொண்டனர்.
பாகிஸ்தானுக்கு திரும்பிய பின்னரும் அவர்களது தொடர்பு தொடர்ந்தது. இறுதியில் அவர்கள் ருபாப் என்ற பெண்ணை அக்தருக்கு பேசி முடித்துள்ளனர். ருபாப்-க்கு 17 வயதுதான் ஆகிறது. அவருடன் உடன்பிறந்தவர்கள் 3 சசோதரர்களும், ஒரு தங்கையும் உள்ளனர். திருமணத்திற்காக தனது சொந்த ஊரான ராவல்பிண்டிக்கு 12-ம் தேதி செல்கிறார் சோயிப் அக்தர்.
ஜூன் 19-ந்தேதி மெகந்தி நிகழ்ச்சியும், 20-ந்தேதி ரக்சாதி ஹரிபுரிலும், 22-ந்தேதி வலிமா நிகழ்ச்சி ராவல்பிண்டியிலும் திருமணம் நடைபெறும் எனவும் எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications