For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

1 லட்சம் பேர்.. கூட்டநெரிசலில் மூச்சுத்திணறல்.. மயங்கி விழுந்து 120 பேர் பலி.. தென்கொரியாவில் ஷாக்

Google Oneindia Tamil News

சீயோல்: தென்கொரியாவில் இறந்தவர்களை நினைவுக்கூறும் வகையில் நடந்த ஹாலோவீன் விழாவில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி இறந்தனர். மேலும் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தென்கொரியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி ஹாலோவீன் எனும் திருவிழா வெகுவிமரிசயைாக கொண்டாடப்பட்டு வருகிறது. புனிதர்கள், தியாகிகள், குடும்பத்தினர்கள், நண்பர்கள் என இறந்தவர்களை நினைவுகூறும் வகையில் இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆடையின்றி வீடியோ கால்.. வசமாய் சிக்கிய பெண் உள்பட 3 பேர்.. கர்நாடக மடாதிபதி தற்கொலையில் ஷாக் தகவல் ஆடையின்றி வீடியோ கால்.. வசமாய் சிக்கிய பெண் உள்பட 3 பேர்.. கர்நாடக மடாதிபதி தற்கொலையில் ஷாக் தகவல்

ஒரு லட்சம் பேரால் கூட்ட நெரிசல்

ஒரு லட்சம் பேரால் கூட்ட நெரிசல்

இந்நிலையில் தென்கொரியா இடோவான் என்ற இடத்தில் உள்ள பிரபல மார்க்கெட் பகுதியில் ஹாலோவீன் திருவிழா தற்போது நடந்து வந்தது. இன்று நடந்த விழாவில் சுமார் 1 லட்சம் பேர் கூடியிருந்தனர். விழா நடந்த இடம் மிகவும் சிறியது என்ற நிலையில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் ஒவ்வொருவரையும் இடித்து கொண்டே நடந்து சென்றனர். ஒருகட்டத்தில் கூட்ட நெரிசல் எல்லை மீறியது.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

இதனால் விழாவில் பங்கேற்ற பலரும் மூச்சுத்திணறி அப்படியே பொத்தென விழுந்தனர். இதை பார்த்து மற்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பலர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காப்பாற்ற முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் பொதுமக்கள் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

120 பேர் பலி

120 பேர் பலி

மொத்தம் 140 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இருப்பினும் கூட்டம் அதிகம் என்பதால் மயங்கியவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 12 மணி நிலவரப்படி ஹலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 120 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளியான வீடியோக்கள்

வெளியான வீடியோக்கள்

இதற்கிடையே தான் ஹலோவீன் திருவிழாவில் ஏற்பட்ட இந்த சோகம் சம்பவம் தொடர்பான படங்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. மீட்டு பணிகளில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஆம்புலன்ஸ்கள் ஈடுபட்டதும், கூட்ட நெரிசலில் மயங்கியவர்களை உயிர் காக்க பொதுமக்களே முதலுதவி செய்தது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி நெஞ்சை உருக்குகின்றன. இந்த சம்பவம் நேற்று தென்கொரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

English summary
At least 120 people died and over 100 were injured in a stampede at a prominent market where a massive crowd had gathered for Halloween festivities in South Korea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X