ஷாக் வீடியோ!முகத்தை மூட மறுத்த பெண்.. நாய் பிடிக்கும் கருவியை கொண்டு கைது.. கலாசார காவலர்கள் அடாவடி
தெஹ்ரான்: ஈரான் நாட்டில் முகத்தை மூடும்படியான உடையைப் பெண்ணை, நாய் பிடிக்கும் கருவியைக் கொண்டு அங்குள்ள கலாசார காவலர்கள் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
ஈரான் நாட்டில் முகத்தை மூடும்படியான உடையை அணிய வேண்டும் என்று விதி உள்ளது. அப்படி உடை அணியாத பெண்கள் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இவற்றைக் கண்காணிக்கவே ஈரான் நாட்டில் கலாசார காவலர்கள் என்று தனிப்பிரிவு உள்ளது. இவர்களது வேலையே இஸ்லாமிய கலாசாரம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்தவே ஆகும்.
|
ஷாக் வீடியோ
இந்நிலையில், பொதுவெளியில் முகத்தை மூடும்படியான உடையை அணியாத பெண் ஒருவரை நாயைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும் கருவியைக் கொண்டு ஈரான் நாட்டின் கலாசார காவலர்கள் கைது செய்யும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் சரியாக எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது எனத் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த வாரம் நடந்தாகக் கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோவை ஈரான் நாட்டின் பெண் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாசிஹ் அலினேஜாத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்,
|
நாய் பிடிக்கும் கருவி
அதில் பெண் ஒருவரை 3 பேரை சேர்ந்து கொண்டு கைது செய்ய முயல்கின்றனர். அதில் முழுவதுமாக புர்கா உடை அணிந்த பெண் கலாசார காவலர் ஒருவர், அந்த பெண்ணின் முடியைப் பிடித்து இழுக்கிறார். மற்றொரு ஆண் அவரது வலது கையை பிடித்து இழுத்துத் தூக்குகிறார். அப்போது போலீஸ் வண்டியில் இருக்கும் மற்றொரு நபர் நாய்களைப் பிடிக்கும் கருவியைக் கொண்டு அந்த பெண்ணை பிடித்து உள்ளே இழுத்துப் போடுகிறார். காண்போரை அதிரச் செய்யும் இந்த வீடியோவுக்கு ட்விட்டரில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

போலீசார் மறுப்பு
இருப்பினும், இந்த குற்றச்சாட்டை ஈரான் போலீசார் முழுமையாக மறுத்துள்ளனர். விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அந்த பெண்ணை போலீசார் கைது செய்ய முயன்றதாகக் குறிப்பிட்ட ஈரான் போலீசார், அப்போது அந்த பெண் போலீசாரிடம் அத்துமீறி ஆவேசமாக நடந்து கொண்டாலேயே சில கடுமையான முறைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்த போலீசார், அந்தப் பெண்ணுக்கு இதனால் காயம் எதாவது ஏற்பட்டதா என்பது குறித்த தகவலைக் கூற மறுத்துவிட்டனர்.

சமூக ஆர்வலர் குற்றச்சாட்டு
அதேநேரம் போலீசாரின் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ள அந்நாட்டின் பெண் சமூக ஆர்வலர் மாசிஹ் அலினேஜாத், அந்த பெண் முகத்தை மூடும்படியான உடையை அணியவில்லை என்பதாலே கைது செய்யப்பட்டுள்ளார். ஈரான் கலசார போலீசார் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது முதல்முறை இல்லை என்று தெரிவித்த மாசிஹ் அலினேஜாத், இதில் அவர்கள் நிச்சயம் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள் எனத் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற வீடியோ வெளியானபோது, வீடியோ எடுத்த நபருக்கே தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கலாசார காவலர்கள்
ஈரான் நாட்டில் 1979இல் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் போது கலாசார போலீசார் என்ற புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டது. பொது இடங்களில் இஸ்லாமியக் கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுகிறது என்பதை உறுதி செய்வதே இந்த போலீசாரின் முக்கிய பணியாகும். ஈரானில் தற்போது முகத்தை மூடும்படியான உடையைப் பெண்கள் அணிய வேண்டும் என்ற விதி உள்ள நிலையில், அதற்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. அதைச் சமாளிக்கக் கடந்த 2019இல் புதிதாக 2000 கலாசார போலீசாரை ஈரான் அரசு சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் மீது முழு வீச்சில் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா.. ஹார்முஸ் ஜலசந்தியும் க்ளோஸ்.. ஒரே பதற்றம் -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
துடி துடித்த தூத்துக்குடி.. குடும்ப கவுரவத்துக்காக நடந்த கொடூரம்! 19 வயது இளம்பெண் ஆணவக்கொலை! -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
பனை விவசாயியை எஸ்.ஐ இசக்கிராஜா சுட்ட வழக்கு.. சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு! -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
கயத்தாறு சம்பவம்.. ஆணவக்கொலை அல்ல! காவல்துறை அளித்த விளக்கம்! வதந்தி பரப்ப வேண்டாம் என வார்னிங் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications