அமெரிக்காவில் பயங்கரம்... கருப்பினத்தவர்கள் சர்ச்சில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 9 பேர் பலி
சார்ல்ஸ்டன்: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள பிரபல கருப்பினத்தவர்கள் தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள சார்ல்ஸ்டன் நகரில் இமானுவல் ஆப்பிரிக்க மெதடிஸ்ட் எபிஸ்கோபல் தேவாலயம் உள்ளது. மாநிலத்தின் பழமையான மற்றும் புகழ் பெற்ற கருப்பினதவர் தேவாலயம் அது. 19வது நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த தேவாலயத்தில் புதன்கிழமை மாலை பிரார்த்தனை கூட்டம் நடந்துள்ளது.

அப்போது இரவு 9 மணி அளவில் நீல நிற ஜீன்ஸ், ஷூ, சாம்பல் நிற டிசர்ட் அணிந்த 20களில் உள்ள வெள்ளை நிறத்து இளைஞர் ஒருவர் தேவாலயத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 9 பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபர் ஒருவரை அழைத்துச் சென்றனர். அந்த வாலிபரும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் போன்று உடை அணிந்திருந்தார். ஆனால் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தப்பியோடிவிட்டதாகவும் அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சார்ல்ஸ்டன் மேயர் ஜோ ரிலீ கூறுகையில்,
வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்தில் நடந்த இந்த சம்பவம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது, மனதை உருக்குவது ஆகும் என்றார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications