மலேசிய விமானம் பற்றி பொறுப்பில்லாமல் பேசியதற்காக மன்னிப்பு கேட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
சிங்கப்பூர்: மலேசிய விமானம் எம்.ஹெச். 17 குறித்து சமூக வலைதளத்தில் பொறுப்பில்லாமல் கருத்து வெளியிட்டதற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுள்ளது.
நெதர்லாந்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே பக் ஏவுணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் பலியாகினர்.

இந்த சம்பவம் நடந்த பிறகு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் உக்ரைன் வான்வெளி வழியாக செல்லவில்லை என்பதை வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இந்த அறிவிப்பை பார்த்த பலரும் இப்படி பொறுப்பில்லாமலா அறிவிப்பது என்று ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸை திட்டித் தீர்த்தனர். இதையடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
வெள்ளிக்கிழமை காலை நாங்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் போஸ்ட் செய்தது பொறுப்பில்லாமல் இருப்பதாக சிலருக்கு தோன்றியுள்ளது எங்களுக்கு தெரிய வந்தது. அந்த தகவலை நாங்கள் வேறு நல்லவிதமாக தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தகவல் வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். எங்கள் நிறுவன விமானங்களில் பயணம் செய்யவிருக்கும் வாடிக்கையாளர்கள் எங்களை தொடர்பு கொண்டு வழித்தடம் பற்றி கேட்டதால் தான் அப்படி அறிவித்தோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications