சிங்கப்பூரில் தீபாவளிக்கு பட்டாசு வைத்த இந்தியர்! ஆயுத தடுப்பு சட்டத்தில் பாய்ந்த நடவடிக்கை! கொடுமை
சிங்கப்பூர்: இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகச் சிங்கப்பூர் இருக்கிறது. அங்குப் பட்டாசுகளுக்குத் தடை இருக்கும் நிலையில், அதைத் தாண்டி பட்டாசு வெடித்ததாகச் சொல்லி இந்தியர் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் அவருக்கு 5 ஆண்டுகள் வரை கூட சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
இந்தியர்கள் பல்வேறு உலக நாடுகளிலும் சென்று செட்டிலாகி வருகிறார்கள். படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் இந்தியர்கள் அப்படியே அங்கேயே இருந்துவிடுகிறார்கள். அப்படி இந்தியர்கள் அதிகம் வாழும் ஒரு நாடாகச் சிங்கப்பூர் இருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சிங்கப்பூரில் இந்தியர்கள் கணிசமான அளவுக்கு வசிக்கிறார்கள்.

சிக்கலில் இந்தியர்
இதற்கிடையே சிங்கப்பூரில் பட்டாசு வெடித்தாக சொல்லி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 39 வயது இளைஞர் மீது அந்நாட்டு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதாவது கடந்த 20ம் தேதி இந்தியாவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளி என்பது இந்தியா மட்டுமின்றி, உலகெங்கிலும் வசிக்கும் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகையாகும். தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் வருவது பட்டாசுகள் தான். இதன் காரணமாகவே நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு சத்தம் காதை பிளக்கும்.
சிங்கப்பூர் ரூல்ஸ்
இருப்பினும், எல்லா நாடுகளிலும் இதுபோல பட்டாசுகளை வெடிக்கலாம் எனச் சொல்ல முடியாது. உலகின் பல்வேறு நாடுகளிலும் காற்று மற்றும் ஒலி மாசைக் கருத்தில் கொண்டு பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும். அங்குத் தீபாவளி நாளிலும் பட்டாசு வெடிக்க முடியாது. அப்படி வெடித்தால் சட்டச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அப்படியொரு பிரச்சனையில் இப்போது இந்திய வம்சாவளி நபர் சிங்கப்பூரில் சிக்கியுள்ளார்.
தீபாவளி கொண்டாட்டத்தின்போது அவர் பட்டாசு வெடித்தாக தெரிகிறது. சிங்கப்பூரில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதையும் தாண்டி அந்த நபர் பட்டாசுகளை வெடித்துள்ளார். இதன் காரணமாகவே அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பட்டாசு வெடித்துச் சிக்கலில் மாட்டிய அந்த நபர் திலீப் குமார் நிர்மல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் கடந்த வாரம் கார்லைல் சாலை திறந்தவெளியில் பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுகிறது.
ஆயுதக் கட்டுப்பாட்டுச் சட்டம்
இதன் காரணமாகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அரசின் 'துப்பாக்கிகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2021'இன் கீழ் அவர் செய்தது தவறாம். இதனால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்கும் வீடியோவை திலீப் இணையத்தில் பகிர்ந்ததாகத் தெரிகிறது. அந்த வீடியோ டிரெண்டான நிலையில், இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்காகக் கடந்த வியாழக்கிழமை திலீப் நீதிமன்றத்திற்கு வீடியோ கால் மூலம் ஆஜரானார். விசாரணை தொடர்ந்து நடக்கும் நிலையில், நவம்பர் 20ம் தேதி அவரை மீண்டும் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
5 ஆண்டுகள் வரை சிறை
சிங்கப்பூரில் பட்டாசுகளையும் கூட வெடிபொருட்களாகவே கருதுகிறார்கள். எனவே, அங்கீகரிக்கப்படாத வெடி பொருட்களைப் பயன்படுத்தினால் அது தண்டைக்குரிய குற்றம். இதற்காக ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் SGD 100,000, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.67 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications