For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கப்பூர் பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி.. மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் லீ நெகிழ்ச்சி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: பொதுத்தேர்தலில் தனது கட்சியை வெற்றிபெறச் செய்ததற்காக சிங்கப்பூர்பிரதமர் லீ நாட்டு மக்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 89 சீட்டுகளில் 83 சீட்டுகளை வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. வொர்க்கர்ஸ் கட்சி 6 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

Singapore PM Lee 'deeply humbled'; thanks people for election win

பிரதமர் லீ கூறியது: சிங்கப்பூர் மக்கள் என் மீதும், எனது அணியினர் மீதும் வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் தலை வணங்குகிறேன். எங்கள் மீது மிகப்பெரிய பொறுப்பை வாக்காளர்கள் சுமத்திவிட்டீர்கள்.

தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியளிக்கிறது. புன்கோல் கிழக்கில் வெற்றி பெற்றது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது (முன்பு வொர்க்கர்ஸ் கட்சியின் கீழ் இருந்தது). ஒரு பக்க ஆதரவு தீர்ப்பை அளித்துள்ளதன் மூலம் நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது.

இவ்வாறு லீ லூங்க் தெரிவித்தார். கடந்த 2011 பொதுத் தேர்தலை ஒப்பிட்டால் செயல் கட்சிக்கு 10 சதவீதம் வாக்கு அதிகரித்துள்ளதும் இதில் குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் மறைந்த சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும், லீ குவான் யூ-வின் மகன்தான் இந்த லீ லூங்க் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Lee Hsien Loong today thanked Singaporeans for their support which led to his People's Action Party register a landslide victory in general election, saying he is "deeply humbled."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X