Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கப்பூரை செதுக்கிய நவீன சிற்பி லீ குவான் யூ...

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: லீ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் சிங்கப்பூரின் தேசத்தந்தை லீ குவான் யூ மரணமடைந்த தகவலை அந்நாட்டு அரசாங்கம் கண்ணீரோடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே நிம்மோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Singapore's Lee Kuan Yew, 'a giant of history

அவர் உயிரிழந்து விட்டதாக கடந்த சில நாட்களாகவே வதந்திகள் பரவினாலும் இன்று அதிகாலையில் அவர் மரணமடைந்த தகவலை அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கடந்த 1923 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவரான லீ குவான் யூ, நவீன சிங்கப்பூரின் சிற்பி என்றும், சிங்கப்பூரின் தந்தை என்றும் அந்நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக்கத்தில் வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.

சிங்கப்பூரின் விடுதலை

இருபதாம் நூற்றாண்டின் சுதந்திர சிங்கப்பூரின் வரலாற்றைத் தொடங்கி வைத்தவர் லீ குவான் யூ.ஆங்கிலேய அரசாங்கத்திடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த லீ குவான் யூ, பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.

மக்கள் செயல் கட்சி

தனது தோழர்களுடன் சேர்ந்து தொடங்கிய மக்கள் செயல் கட்சியின் மூலம் தேர்தலில் போட்டியிட்டு சுதந்திர சிங்கப்பூர் உருவாவதற்கு ஒரு காரணியாகவும் இருந்த அவர், சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார்.

முதல் பிரதமர் லீ

கடந்த 1959 ம் ஆண்டு, சிங்கப்பூரின் முதல் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட லீ குவான், தனது 31 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தற்போதைய நவீன சிங்கப்பூருக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வித்திட்டார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் அதுவரை துறைமுக நகரமாக அறியப்பட்ட சிங்கப்பூர் பிரம்மிக்கும் வகையில் வர்த்தக நகரமாக உருமாறியது.

சர்வாதிகார ஆட்சி

மிக நீண்ட காலத்திற்கு சிங்கப்பூரின் பிரதமராக இருந்த பெருமை மட்டுமல்ல, அந்த காலத்தில் ஒரு நாட்டை ஒன்றுமில்லா நிலையிலிருந்து மிக மேன்மட்டத்திற்கு உயர்த்திய பெருமையும் அவருக்குண்டு.சிங்கப்பூரை செல்வந்த மையமாக மாற்றியதற்காக அவர் பரவலாக பாராட்டப்பட்டாலும் அவரது சர்வாதிகார ஆட்சிமுறை மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

லீ திட்டங்கள்

அரசியல்வாதிகள் முறையற்ற வகையில் சொத்துக்குவிப்பதை தடுக்க புலனாய்வு விசாரணை மையம் (Corrupt Practices Investigation Bureau)CPIB ஒன்றை ஏற்படுத்தினார்.

அரசை ஏமாற்றிய அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட்டனர். அவர்களின் சொத்தும் அவர்களைச் சார்ந்தோரின் சொத்துக்களும் கண்காணிக்கப் பட்டன.

மக்களுக்கு அடையாள எண்கள்

எல்லா மக்களும் தங்கள் சொத்துக் கணக்கைஅரசிடம் ஒப்படைக்க வேண்டும்.மூன்று மாதத்தில் எல்லோருக்கும் ஒரு ஐ.டி எண் வழங்கப்பட்டது.

உங்கள் கார்டின் வண்ணம் கூட உங்களின் சமூக நிலையைக் கூறிவிடும்; அரசியல்வாதிகளின் வழக்கமான 'பினாமி' இல்லாது ஒழியும்.

சொத்துக்கள் பறிமுதல்

அரசின் கட்டளைகளை மீறும் அரசியல்வாதிகள், அவர்களது ஒட்டிய உறவினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

இரு குழந்தைகள்

இரு குழந்தைகள் போதும்; அதற்கு மேல் மக்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

மூன்று நான்கு குழந்தைகள் உள்ளோருக்கு அரசியல் சலுகைகள் குறைக்கப்படும்.

ஊக்கப்பணம் குறைப்பு

இரண்டாவது குழந்தைப்பேறுக்கு தனி விடுமுறை கிடையாது. இரண்டாவது குழந்தைக்கு மேல் குழந்தை பெறுவோரின் சம்பளத்தில் ஓராண்டிற்குரிய ஊக்கப் பணம் குறைக்கப்படும்.

இரு குழந்தைகளுக்கு மேல் பிள்ளை பெற்றோர் பெரிய சமுதாயப் பொறுப்புள்ள பதவிகளைப் பெற முடியாது என்பன உள்ளிட்ட பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

மதிப்பு மிக்க அரசியல்வாதி

லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக திகழ்ந்தார். 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் பதவியில் பணியாற்றினார்.

50வது சுதந்திரதினம்

இந்த ஆண்டு 50வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தன் நாட்டு மக்களுக்கு உத்தரவிட்டிருந்தார் லீ. ஆனால் லீ மரணத்திற்கு சிங்கப்பூர்வாசிகள் தற்போது கண்ணீர் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+