சிங்கப்பூர் சுதந்திர தின பொன்விழா: தமிழ் தேசியப் பாடலை உருவாக்கிய 5 தமிழர்கள்
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தேசிய சிறப்புகளைக் கூறுகின்ற பாடல் ஒன்றினை தமிழில் இயற்றி, இசையமைத்து வெளியிட்டுள்ளனர் சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் ஐவர்.
தென்கிழக்காசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நாட்டில் பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான தமிழர்களும் பரவலாக வாழ்ந்து வருவதால் சிங்கப்பூர் அரசின் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழியும் இடம்பெற்றுள்ளது.

விடுதலை பெற்ற சிங்கப்பூர்:
இங்கிலாந்தின் ஆதிக்கத்தில் இருந்த சிங்கப்பூர் 1963 ஆம் ஆண்டு அந்நாட்டிடம் இருந்து விடுதலை பெற்று தனிநாடாக மாறியது.
50 ஆவது சுதந்திர தினம்:
இந்த ஆண்டு தங்களது 50 ஆவது சுதந்திர தின விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாட சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
தனிப்பெருமை கூறும் தேசியப்பாடல்:
இந்நிலையில், சிங்கப்பூரின் வரலாற்று பெருமையையும், தனிச்சிறப்பு மிக்க பாரம்பரியத்தையும் விளக்கும் நாட்டுப்பற்று பாடல் ஒன்றை தமிழில் இயற்றி, அதற்கு இசையமைக்கும் முயற்சியில் சிங்கப்பூர் தமிழரான லோகப்பிரியன் ரங்கநாதன் களமிறங்கினார்.
50 ஆயிரம் டாலர் ஊக்கத் தொகை:
இந்த முயற்சிக்கு 50 ஆயிரம் டாலர்களை நிதியாக வழங்கிய அரசு அவரை ஊக்கப்படுத்தியது.
பறைசாற்றப்பட்ட தாய்நாட்டுப் பற்று:
இதனையடுத்து, அந்நாட்டின் இசை, நடனம் மற்றும் பாரம்பரிய சிறப்புகளை விளக்கும் பாடலை இயற்றி, இசையமைத்து, பாடி, ஒலிப்பதிவு செய்து அதை 19 நடனக் குழுவினர் மற்றும் இசைக்கலைஞர்களை வைத்து வீடியோ பதிவாகவும் வெளியிட்டு லோகப்பிரியன் ரங்கநாதன் தலைமையிலான ஐவர் குழு தங்களது தாய்நாட்டுப் பற்றை பறை சாற்றியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications