எல் சல்வடார் நாட்டின் சிறுவர் சிறை கலவரத்தில் 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சான் சல்வடார்: எல் சல்வடார் நாட்டில் உள்ள சிறுவர் சிறையில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆறு பேர் பலியாகினர்.

எல் சல்வடார் நாட்டின் தலைநகரான சான் சல்வடார் நகரின் புறநகர் பகுதியில் உள்ளது சிறுவர் சீர்திருத்த சிறை. 700-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ள இந்த சிறையில், கைதிகள் தனித்தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதில் உள்ள ஒரு கோஷ்டியின் பெயர் மாரா சல்வரட்சா அல்லது எம்.எஸ்.-13.

எம்.எஸ்.13 கோஷ்டிக்கும், மற்றொரு கோஷ்டிக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக பகை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறைக்குள் இரு கோஷ்டிகளுக்கும் இடையே கடும்மோதல் ஏற்பட்டது. இதில் 2 மைனர் குற்றவாளிகள் உள்பட 6 கைதிகள் கொல்லப்பட்டனர். இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து , அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+