ஷாக்.. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை தொடர்ந்து.. ஸ்லோவேக்கியா பிரதமருக்கும் கொரோனா..!
ஸ்லோவாக்கியா பிரதமருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது
பிராத்திஸ்லாவா: பிரான்ஸ் அதிபர் கொரோனா தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற, ஸ்லோவேக்கியா நாட்டின் பிரதமருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 1.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்... இந்த தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காதான் டாப் லிஸ்ட்டில் உள்ளது.. அடுத்ததாக இந்தியா இருக்கிறது.
3வது இடத்தில் பிரேசிலும், ரஷ்யா நான்காவது இடத்திலும், பிரான்ஸ் 5வது இடத்திலும் உள்ளன.. உலக அளவில் இப்படி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்... அந்த வகையில் அதிபர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை தந்து வருகிறது.

பிரான்ஸ் அதிபர்
ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கூட்டம் பெல்ஜியம் நாட்டின் பிரசெல்ஸ் நகரில் கடந்த 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றது... இந்த கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெட்ஸ்டெக்ஸ், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஜ்ஜீஸ், லக்சம்பர் பிரதமர் சேவியர் பெட்டல், ஸ்லோவேக்கியா பிரதமர் ஐஹோர் மடோவிக் உள்ளிப்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்... இத்தனைக்கும் இந்த கூட்டத்தில் சமூக இடைவெளியை உட்பட அனைத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் அனைவருமே பின்பற்றினர்.

டெஸ்ட்
இந்த சமயத்தில்தான், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கடந்த 17-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது... இருமல் உள்ளிட்ட சில அறிகுறிகள் மேக்ரானுக்கு ஏற்பட்டதையடுத்து அவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது.. அதனால் அதிபரே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இதனால், மேக்ரானின் மனைவியும் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

கொரோனா
இதனிடையே, ஒருவேளை, ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் பங்கேற்ற பல நாடுகளின் தலைவர்களும் கொரோனா பரவியிருக்கலாமோ என்ற கலக்கம் எழுந்தது.. அதனால், அந்த ஐரோப்பிய கூட்டத்தில் பங்கேற்ற எல்லாருக்குமே கொரோனா டெஸ்ட் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன... அந்த வகையில் ஸ்லோவேக்கியா நாட்டின் பிரதமர் ஐஹோர் மடோவிக்-கும் டெஸ்ட் செய்து கொண்டார்..

அலுவல் பணி
அப்போது அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.. ஐஹோருக்கு 47 வயதாகிறது.. இதையடுத்து ஐஹேர் மடோவிக் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்... "பிரதமர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார், இருந்தாலும் அவர் தனது அலுவல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார்" என்று ஸ்லோவேக்கியா அரசு தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications